பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சாதனை முதலீடு!
2024-ம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பங்குச்சந்தையில் ரூ.1.88 லட்சம் கோடி சாதனை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2024-ம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பங்குச்சந்தையில் ரூ.1.88 லட்சம் கோடி சாதனை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 5 ஆண்டுகளுக்கு முன்பு மியூச்சுவல் ஃபண்ட் பங்குச் சந்தையில் செய்த முதலீட்டை விட 5 மடங்கு இது அதிகம்.
அயல்நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நடப்பு நிதியாண்டில் ரூ.2.08 லட்சம் கோடி முதலீடு செய்ததுடன் மியூச்சுவல் ஃபண்டின் ரூ.1.88 லட்சம் கோடி முதலீடு ஒப்பிடப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குச்சந்தையில் முதலீட்டு ஆதரவைப் பெருக்கி வந்துள்ளனர். ஈக்விட்டி ஸ்கீம்களில் ரூ.1.58 லட்சம் கோடி நிகர முதலீடுகளாக இந்த ஆண்டு வந்துள்ளது, அதுவும் மார்ச் மாதம் இல்லாமல். 2018-ல் இந்த முதலீடு ரூ.1.69 லட்சம் கோடியை எட்டியது.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்ஸ் டி.பி.சிங் இது தொடர்பாகக் கூறும்போது,
“பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் கலாச்சாரம் வளர்ந்து வருவதும் பணத்தைச் சேமிப்பவர்கள் முதலீட்டாளர்களாக மாறும் போக்கும் பங்குச் சந்தையில் முதலீடுகள் உள்வரத்து அதிகரிக்கக் காரணம். இது சமீப காலங்களில் மேன்மேலும் அதிகரித்து வருகிறது,” என்றார்.
கடந்த 2 ஆண்டுகளில் உள்வரத்து முதலீடுகளில் 40 சதவீதம் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு நிதியங்களுக்கே சென்றுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் மிட் கேப் திட்டங்களில் சொத்துக்கள் மதிப்பு 2.96 லட்சம் கோடியாகியுள்ளது.
தேசியப் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்களில் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட்களின் முதலீடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வாக்கில் 8.81% என்று உச்சபட்ச நிலையை எட்டியுள்ளது.
ஆகவே, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதன் மீதான அச்சமும், ஐயமும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி இன்று சேமிக்கும் மக்களுக்கு ஒரு பெரிய முதலீட்டு லாபகர வாசலாக மியூச்சுவல் ஃபண்ட் உள்ளது என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
தகவல் உதவி: தி இந்து பிசினஸ்லைன்