குடியரசு தினம் 2021: ரஃபேல் சாகசம்; கோவிட் தடுப்பு மருந்து: இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் மிஸ்ஸிங் என்ன?
குடியரசு தினத்தில் குறைந்த கொண்டாட்டங்கள்!
வழக்கமாக பிரம்மாண்டமாக நடைபெறும் குடியரசு தினத்தின் கொண்டாட்டங்கள் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுநோய் அந்த மாதிரி நடைபெறவில்லை. இன்றைய கொண்டாட்டத்தில் புது தில்லியில் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடந்தது.
வழக்கமாக இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள். ஆனால் இன்று இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. 25,000 க்கும் அதிகமானோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
எனினும் ஸ்மார்ட்போனில் அணிவகுப்பை நேரடியாகப் பார்க்கும் வகையில், ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும் 'குடியரசு தின அணிவகுப்பு 2021’ என்ற மொபைல் ஆப்'பை இந்திய அரசு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்மூலம் நிறைய பேர் அணிவகுப்பை கண்டு ரசித்தனர்.
விருதுகள் இல்லை, 15 வயதிற்குட்பட்ட பார்வையாளர்கள் இல்லை!
அனைத்து மதிப்புமிக்க விருதுகளும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த ஆண்டு விருது வென்றவர்கள் இந்த நிகழ்வில் இருக்க மாட்டார்கள் என்று அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதேபோல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாதுகாப்புக் காரணங்களால் அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
குறைந்த மக்கள் கூட்டம்!
முந்தைய ஆண்டில் 1,20,000 என மக்கள் கூட்டம் இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது பார்வையாளர்கள் 25,000 ஆகவே இருந்தனர். அதேபோல் ஊடக நபர்களும் குறைந்த அளவிலேயே பங்கேற்றிருந்தனர். வழக்கமான 300 பேருக்கு மாறாக 200 ஊடக நபர்களை மட்டுமே அணிவகுப்பை படம்பிடிக்க அரசாங்கம் அனுமதித்திருந்தது.
அணிவகுப்பு!
அணிவகுப்புப் படையினரின் அளவு 144 லிருந்து 96 ஆகக் குறைக்கப்பட்டிருந்தது. மேலும் செங்கோட்டை வரை அணிவகுத்துச் செல்வதற்குப் பதிலாக, இது இந்திய நுழைவாயிலின் சி-ஹெக்ஸாகனில் உள்ள தேசிய அரங்கம் வரை மட்டுமே அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கோவிட் -19 தடுப்பு மருந்து!
முதல்முறையாக அணிவகுப்பில் கோவிட் -19 தடுப்பு மருந்து இடம்பெற்றது. COVID-19 தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளை பயோடெக்னாலஜி துறையின் (டிபிடி) சாதனையை காண்பிக்கும் வகையில் இடம்பெற்றது. தடுப்பூசியின் சோதனை மற்றும் சோதனையின் பல்வேறு கட்டங்களை இது சித்தரித்தது.
சிறப்பு அழைப்பாளர் இல்லாமல் விழா!
ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று அணிவகுப்பில் கலந்து கொள்ள வேறொரு நாட்டிலிருந்து ஒரு புகழ்பெற்ற தலைவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார். ஆனால் இந்த ஆண்டு அணிவகுப்பில் எந்த சர்வதேச தலைமை விருந்தினரும் பங்கேற்கவில்லை.
ஆரம்பத்தில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். அவரும் முதலில் வர சம்மதித்திருந்தார். ஆனால் பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா அதனால் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக ஜான்சன் இந்திய அழைப்பை ரத்து செய்தார்.
சிறப்பு விருந்தினர் இல்லாமல் குடியரசு தினம் நடைபெறுவது வரலாற்றில் இது நான்காவது முறையாகும். முன்னதாக, 1952, 1953 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர் வரவில்லை.
உள்ளூர் குரல்
அணிவகுப்பின் போது அரசாங்கத்தின் 'உள்ளூர் குரல்' ‘வோக்கல் ஃபார் லோக்கல்’ முன்முயற்சியை தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப அமைச்சகம் காட்சிப்படுத்தி இருந்தது.
கலாச்சார அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களிலிருந்து ஒன்பது அணிவகுப்புகள் இடம்பெற்றிருந்தது. மற்றும் ஐ.ஏ.எஃப், கடற்படை, இந்திய கடற்படை கடலோரக் காவல்படை, டி.ஆர்.டி.ஓவைச் சேர்ந்த இருவர் மற்றும் பி.ஆர்.ஓ (எல்லை சாலைகள் அமைப்பு) ஆகியோரை உள்ளடக்கிய பாதுகாப்புக் குழுவில் ஆறு பேர் அணிவகுப்பில் பங்குபெற்றனர். புதிய இந்தியா மற்றும் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப பயணங்களை அமைச்சகம் காட்சிப்படுத்திருந்தது.
ரஃபேல் போர் விமானங்கள்
கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரான்சில் இருந்து வாங்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு (ஐ.ஏ.எஃப்) சேர்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் முதல் முறையாக அணிவகுப்பில் பங்கேற்றன. அதிலும் பெண் போர் விமானியான, லெப்டினன்ட் பவானா காந்த், ரஃபேல் போர் விமானத்தை இயக்கி இருந்தார்.
மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு!
தொற்றுநோய் காரணமாக, மோட்டார் சைக்கிள் சாகச அணிவகுப்புகள் இந்த வருடம் இல்லை. வழக்கமாக இது குடியரசு தின கொண்டாட்டங்களில் பார்வையாளர்களின் ஒரு சிறப்பம்சமாக இருக்கும்.
ராம் மந்திர்!
உத்தரபிரதேச மாநிலம் தனது அணிவகுப்பில் ராம் கோயிலின் பிரதி ஒன்றைக் கொண்டிருந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தில் உள்ளதை குறிக்கும் வகையில் இது இடம்பெற்றிருந்தது.
ஆங்கிலத்தில்: ராஷி | தமிழில்: மலையரசு