Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கோவையில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது Kovai.co - 2023ல் வேலை வாய்ப்பை அதிகரிக்க திட்டம்!

சொந்த மண்ணான கொங்கு நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக லண்டனில் IT துறையில் பணிபுரிந்து சரவணக்குமாரால் கோவையில் உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் நிறுவனமான Kovai.co தற்போது மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது.

கோவையில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது Kovai.co - 2023ல் வேலை வாய்ப்பை அதிகரிக்க திட்டம்!

Friday December 02, 2022 , 2 min Read

சொந்த மண்ணான கொங்கு நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக லண்டனில் ஐடி துறையில் பணிபுரிந்து சரவண குமார் கோவையில் தொடங்கிய சாப்ட்வேர் நிறுவனமான Kovai.co தற்போது மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது.

கோவை.கோ நிறுவனம்:

Kovai.co என்பது தமிழ்நாட்டில் உள்ள கோவையிலும், இங்கிலாந்தில் லண்டனியிலும் இயங்கி வரும் சாஸ் அடிப்படையில் பல வகையான மென்பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இன்டக்ரேஷன் ஆர்கிடெக்ட்டாக பணியாற்றிய சரவண குமாரால், 2011ம் ஆண்டு இது நிறுவப்பட்டது.

இந்நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 10 மில்லியன் டாலர்கள் ஆகும். 240க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட Kovai.co 2050ம் ஆண்டுக்குள் 30 மில்லியன் வருவாயை எட்டித்தொட வேண்டும் என்ற இலக்குடன் முன்னேறி வருகிறது.

Kovai

உலக அளவில் 2500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் தேசிய அளவில் பல அங்கீகாரங்களையும் குவித்து வருகிறது. SaaSBoomi வழங்கும் “Bootstrapped SaaS ஸ்டார்ட்அப் ஆஃப் தி இயர்”, 2021ல் தி எக்கனாமிக் டைம்ஸின் “தி பூட்ஸ்டார்ப் சாம்பியன் விருது”, அதுமட்டுமின்றி, NASSCOM Emerge 50 விருதுகள் 2021 Kovai.co-வின் நாலேஜ் மேனெஜ்மெண்ட் தயாரிப்பான 360ஐ அங்கீகரித்துள்ளது.

Get connected to Kovai.coys-connect

கோவையில் புதிய அலுவலகம்:

லண்டன் மற்றும் கோவையில் இயக்கி வந்த Kovai.co நிறுவனம் கோவையில் பிரம்மாண்டமான புதிய அலுவலகத்திற்கு மாறியுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ள நிலையில், கோவையில் 4,500 சதுர அடியில் அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

Kovai

அலுவலக தொடக்க விழாவில் கிஸ்ஃப்ளோவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் கலந்து கொண்டார். மென்பொருள் நிறுவனத்தில் வணிகச் சிக்கல்களைத் தீர்க்க தயாரிப்புகளை உருவாக்கி வரும் Kovai.co நிறுவனம், 2030 ஆம் ஆண்டுக்குள் SaaS-Unicorn ஆக மாறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தொடக்க விழாவில் பேசிய Kovai.co இன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சரவண குமார்,

“இங்கே பணிபுரியும் ஊழியர்கள், குழுக்கள் மற்றும் பார்ட்டனர்கள் மத்தியில் தாங்கள் பணிபுரியும் நோக்கத்தின் அடிப்படையில் இருப்பது எங்கள் நிறுவனத்தின் மீள்தன்மையை உணர்த்துகிறது. இந்த அலுவலகம் எங்கள் ப்ராண்டின் பிரதிநிதியாக விளங்குகிறது. இங்குதான் மதிப்புமிக்க ப்ராடக்ட்கள் உருவாக்கப்படுகிறது,” என தெரிவித்தார்.
Get connected to Kovai.coys-connect

மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான Kovai.co ஊழியர்கள் பிற துறைகளின் செயல்பாடுகள், அங்குள்ள ஊழியர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், வாடிக்கையாளர்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயாரிப்புகளை உருவாக்குவது எப்படி என புரிந்துகொள்ளவும் ஊக்குவிக்கிறது. இத்தகைய முயற்சிகள் புதுமைகளை ஊக்குவிக்கவும், ஊழியர்களின் செயல்திறன் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் உதவும் என நிறுவனம் நம்புவதாக தெரிவித்தார்.

சீரான முன்னேற்றம் காரணமாக Kovai.co 2023ம் ஆண்டில் அதிக பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் திறன்களை உருவாக்குதல், கற்றல் மற்றும் மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர்கள் தயாரிப்பை மேம்படுத்துதல், Churn360, Document360 மற்றும் Serverless360 தயாரிப்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

Get connected to Kovai.coys-connect