ரூ.1,260 கோடி! அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய சி.இ.ஓ நிகேஷ் அரோரா!
கலிபோர்னியாவின் சான்டா கிளாராவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் பணியாற்றும் நிகேஷ் அரோரா, அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் 2வது தலைமை நிர்வாக அதிகாரி என்று ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பட்டியலிட்டுள்ளது.
கலிபோர்னியாவின் சான்டா கிளாராவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் பணியாற்றும் நிகேஷ் அரோரா அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் 2வது தலைமை நிர்வாக அதிகாரி என்று ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பட்டியலிட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சமீபத்தில் அமெரிக்காவில் 2023-ம் ஆண்டுக்கான அதிக சம்பளம் வாங்கும் CEO-க்களின் பட்டியலை வெளியிட்டது, இப்பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 சி.இ.ஓ.க்கள் இடம்பெற்றுள்ளனர், இதில், ஆல்பபெட் இன்க் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் ஆகியோர் அடங்குவர்.
இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளி பில்லியனர் தொழிலதிபர் நிகேஷ் அரோரா 2வது இடம் வகித்துள்ளார். முதலாம் இடத்தில் பிராட்காம் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹாக் டான் உள்ளார். நிகேஷ் அரோரா சி.இ.ஓ. பதவியிலிருக்கும் பாலோ ஆல்ட்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனம் $91 பில்லியன் (தோராயமாக ரூ.7.5 லட்சம் கோடி) சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திகளின்படி,
2023-ம் நிதியாண்டில் அரோராவின் வருவாய் $151.43 மில்லியன் (தோராயமாக ரூ.1,260 கோடி) ஆகும். இத்தகைய சம்பளம் அவரது பங்குத் தெரிவுகளால் பெருகியதாகும். இதனையடுத்து, அவர் அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது சி.இ.ஓ. ஆக உயர்வு பெற்றார். சுந்தர் பிச்சை ($8.8 மில்லியன் அல்லது ரூ. 73 கோடி) மற்றும் மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க் ($24.40 மில்லியன் அல்லது ரூ. 203) போன்ற தொழில்நுட்பத் தலைவர்களை விஞ்சினார் நிகேஷ்.
பாலோ ஆல்டோ நெட்வொர்க்கில் இணைவதற்கு முன்பு, நிகேஷ் அரோரா ஏற்கனவே தொழில்நுட்பத் துறையில் பல உயரிய பதவிகளில் பணியாற்றி நற்பெயரைப் பெற்றிருந்தார். அவர் SoftBank குழுமத்தின் தலைவர் மற்றும் COO ஆகவும் Google-இல் ஒரு பத்தாண்டு காலம் மூத்த துணைத் தலைவர், CBO, உலகளாவிய விற்பனை செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாட்டுத் தலைவராகவும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் நிறுவனத்தின் பிரெசிடெண்ட் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்தார். டி-மொபைலில் CMO ஆகவும் இருந்தார்.
மின்ட் தகவல்களின்படி, நிகேஷ் அரோரா 2012-இல் கூகுளில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகி ஆனார், இதன் மூலம் $51 மில்லியன் (தோராயமாக ரூ.424 கோடி) சம்பாதித்தார். கூகுள் நிறுவனத்தில் தனது பதவிக்காலம் முடிவதற்குள், அவர் 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,664 கோடி) வருவாய் ஈட்டினார்.
இந்திய விமானப்படை குடும்பத்தைச் சேர்ந்த நிகேஷ் அரோரா, டெல்லியில் உள்ள விமானப்படை பள்ளியில் (TAFS) பள்ளிப்படிப்பை முடித்தார். இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்), வாரணாசியில் இருந்து மின் பொறியியலில் பி.டெக். பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவின் வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் எம்.எஸ். படிப்பையும், பாஸ்டன் கல்லூரியில் பைனான்ஸில் எம்.எஸ், படிப்பையும் படித்துள்ளார்.
அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இந்திய நிறுவன சிஇஓக்கள் யார்; அவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?