இளமையிலே முதுமை காண வேண்டுமா? யூத்தை வயதாகிக் காட்டும் FaceApp
FaceApp மூலம் நம் செல்ஃபியை எடுத்து அனுப்பினால் நம் முதுமைப் பருவத்தில் நமது முகம் எவ்வாறு இருக்கும் என நாம் பார்க்கமுடியும்.
ஆண்களிடம் ஊதியத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்கக் கூடாது என நம் முன்னோர்கள் கூறுவார்கள். முன்பெல்லாம் யாரிடமாவது வயதைக் கேட்டால் கூட சொல்லத் தயங்குவார்கள். அல்லது தங்களின் வயதைக் குறைத்து கூறுவார்கள். ஆனால், நவீன டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.
செல்போன் மூலம் உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. லட்சக்கணக்கான Apps கூகுள் பிளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. இதன் மூலம் நாம் இருந்த இடத்தில் இருந்தே நினைத்ததை நடத்திக் காட்டலாம். இதில் தற்போது வைரலாகி, உலகம் முழுவதும் கலக்கி வருவகிறது #FaceApp.
இந்த FaceApp ’பை முதலில் நாம் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் நம்மை செல்பி எடுத்து App பயன்படுத்தி க்ளிக் செய்தால் நமது முதுமைப் பருவத்தில் நம் முகம் எவ்வாறு இருக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
இந்த app பிரபலமான உடனே #FaceAppChallenge என சமூக ஊடகத்தில் தொடங்கி சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களின் முதுமை படத்தை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாளம் என அனைவரும் தங்களின் தோல் சுருக்கம் விழுந்த, தலை நரைத்த 50-60 வயது தோற்றமுடைய புகைப்படத்தை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். இதற்கு விழும் லைக்ஸ் மற்றும் கமென்டுகளை கண்டு ரசித்து மகிழ்கின்றனர் மக்கள்.
முதுமை படத்தை வெளியிடாத பிரபலங்களுக்கு பதில் அவர்களின் ரசிகர்கள் தங்களின் ஹீரோக்கள், ஹீரோயின்களின் புகைப்படங்களை இந்த app பயன்படுத்தி, அவர்களின் முதுமைக்கால படங்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர்.
#FaceAppChallenge வெளியான பிரபலங்கள் முதுமை போட்டோக்கள்
cricketshotsofficial என்ற பக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களின் முதுமை படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளியது.
பாலிவுட் திரைப்பட ரசிகர் ஒருவர் தன் பக்கத்தில் சில ஹிந்தி நடிகர்களின் போட்டோக்களை முதுமை பில்டர் பயன்படுத்தி அவர்களின் படத்தை வெளியிட்டார்.
ஹாலிவுட், பாலிவுட் ஹீரோக்கள் போட்டோ போட்டால் மட்டுமெ போட்டால் போதுமா? நம்மூர் ஹீரோக்களை அவர்களின் முதுமை வயதில் பார்க்க நினைத்த சினிமா வெப்சைட் movie.crow.com பிரபல நட்சத்திரங்களின் போட்டோவை #FaceApp செய்து வெளியிட்டது.
FaceApp உருவான கதை
ரஷ்யாவில் வயர்லெஸ் லேப்’ல் 2017ல் உருவாக்கப்பட்ட இந்த Appஇல் தற்போது மேம்படுத்தப்பட்ட old age filter அறிமுகமானது. இதைப் பயன்படுத்தி, தற்போது புகைபப்படங்களை வயதான தோற்றத்துக்குத் தத்ரூபமாக மாற்றிவிட முடியும்.
Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் போட்டோ எடிட்டர், நமது புகைப்படத்தை மாற்றி, மேம்படுத்தப்பட்ட Neural Networks எனும் தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக படத்தை நமக்கு தந்துவிடுகிறது. இதைப் புது வரவாக வெளியிட்ட #FaceAppக்கு உடனடியாக வரவேற்பு கிட்டிவிட்டது.
இது மிகச் சிறப்பான முறையில் நமது புகைப்படத்தில் உள்ள ஓவ்வொரு பிக்ஸல்லையும் மாற்றம் செய்து, தத்ரூபமாக நமது முதுமைப் பருவ புகைப்படத்தை உருவாகித்தருகிறது.
மேலும், புகைப்படத்தில் ஸ்மைலீஸ், டாட்டூஸ் போன்றவற்றையும் இணைக்கலாம். கண்ணாடி அணிந்திருந்திருப்பது போன்ற தோற்றம், தலைமுடியின் நிறத்தை மாற்றுவது, ஏன் ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் கூட மாற்றும் பாலின மாற்ற வசதியும் உள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.
இந்த Appஆனது கூகுள் பிளே ஸ்டோரில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தான் இது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் ’revolutionary selfie App’ எனப் புகழப்பட்டுள்ளது.
ஆனால், இது பெரிய புரட்சிகரமான செல்பி ஆப் கிடையாது. எவ்வளவு மோசமான தெளிவற்ற படமாக இருந்தாலும் இந்த App கவனத்தில் கொள்ளாது அப்படியே அந்த புகைப்படத்தை உருமாற்றம் செய்து மிக மோசமாக பதிவிட்டு விடுகிறது என்ற பயனாளர்களின் புகார்களும் உள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
மேலும், இது அனுமதியின்றி நமது போட்டோ கேலரியில் உள்ள மற்ற புகைப்படங்களையும் கையாளுகிறது என்ற புகார்களும் சிலரிடம் இருந்து கிளம்புகிறது.
எது எப்படியோ, கால ஓட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் இன்னும் 30 அல்லது 60 வருடங்களுக்கு பிறகு வயதான தோற்றத்தில் எப்படி இருப்போம் என்பதை கண்டுகளிப்பது ஓர் திரில்லிங்கான அனுபவம்தானே.
Enjoy guys...