1 மாதத்தில் 10-12 லட்சம் மோமோஸ் விற்பனை; கோடிகளில் வருவாய்!

By YS TEAM TAMIL|28th Apr 2020
டெல்லி மோமோஸ் வாலி மேடம்-ன் வெற்றிக் கதை இது!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

"டெல்லியில் 'மோமோஸ் வாலி மேடம்' என்று பிரபலமாக அறியப்படும் யுனிடா ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பூஜா மகாஜன், நாடு முழுவதும் மோமோஸை விற்பனை  செய்கிறார்.


அவரது தொழிற்சாலையில் 10 முதல் 12 லட்சம் மோமோஸ்க்கள் தயாரிக்கப்படுகின்றன. அவர் அசைவ, சைவ மோமோஸ், ஸ்பிரிங் ரோல்ஸ், சமோசா, இட்லி, மற்றும் சக்கரவள்ளிக்கிழங்கு வடையை தயாரிக்கின்றனர். பூஜா அவரது வீட்டிலேயே முதல் வெற்றிகரமான பெண் தொழில்முனைவர் ஆவார்.

1

ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் விநியோகச் சேவை நிறுவனமான ஸ்விக்கியின் ராகுல் ஜாமினி, ஸ்ரீஹர்ஷா மற்றும் நந்தன் ரெட்டி ஆகியோர் பில்லியனர் ஆனார்கள்.  சொந்தமாக கோடி ரூபாயை வியாபாரத்தில் ஈட்டிய டெல்லியைச் சேர்ந்த பூஜா மகாஜன், 'மோமோஜ் வாலி மேடம்' என்று பிரபலமானார். யம் யூம் டிம்ஸம்ஸ் என்ற அவரது மோமோஸ்கள் நாடு முழுவதும் விற்கப்படுகின்றன. அவரது தொழிற்சாலை ஒரு மாதத்தில் பன்னிரண்டு லட்சம் மோமோஸ்களை தயாரிக்கிறது.


பூஜா தனது படிப்பை முடித்த பின்னர் 1998ல் பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் சொந்தமாகத் தொழில் செய்யத் தீர்மானித்தார். 2004 ஆம் ஆண்டில், அவர் தனது வேலையை விட்டுவிட்டு, குர்கானில் உள்ள டி.எல்.எஃப் மாலில் பம்பாய் சௌபட்டி என்ற உணவகத்தைத் தொடங்கினார். அதே நேரத்தில், அவர் பம்பாயின் டிராலி வணிகமான 'சிட் பிரான்கி'யில் சிறிது பணம் முதலீடு செய்தார். வியாபாரம் வளர்ந்தபோது, ​​அவர் மோமோஸ் டிராலியைத் தொடங்கினார்.


பூஜா 2008 ஆம் ஆண்டில் அரசாங்கத்திடம் கடன் வாங்கி, தைவானில் இருந்து இறக்குமதி செய்த இயந்திரத்துடன் டெல்லியின் கிதோர்னியில் தனது சொந்த மோமோஸ் தொழிற்சாலையை அமைத்தார்.

குளிரூட்டும் அறைகளை நிறுவியதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மோமோஸ்கள் ஆலையில் தயாரிக்கத் தொடங்கின. அவரது தொழிற்சாலையின் மோமோஸ்கள் நாடு முழுவதும் உள்ள சினிமா அரங்குகள், மல்டிபிளெக்ஸ், ஹோட்டல், உணவு வழங்குநர்கள், உணவகங்கள், காபி சங்கிலிகளில் விற்கத் தொடங்கின.

இந்த நேரத்தில், இவரின் வணிக வருவாய் கோடிகளில் உள்ளது. ஒரு மாதத்தில் 10 முதல் 12 லட்சம் மோமோஸ்கள் இவர்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. அவரது தொழிற்சாலை சைவ, அசைவ மோமோஸ், ஸ்பிரிங் ரோல்ஸ், சமோசா, இட்லி மற்றும் சக்கரவள்ளிக்கிழங்கு வடை ஆகியவற்றை தயாரிக்கிறது. தொடக்கத்தில் தனக்கு லாஜிஸ்டிக் ஆதரவு சரியாக இல்லை என்று கூறும் பூஜா, மெதுவான முறையில் முழுமையான வெற்றியுடன் தனது நிறுவனத்தைத் தொடர்ந்து முன்னேற்றி வந்திருக்கிறார்.

“குடும்பத்தில், தொழிலின் மூலம் வருவாய் ஈட்டும் முதல் பெண்மணி நான் தான். என் பெற்றோர்கள் ஆசிரியர்கள். படித்த முடித்த பிறகு, பெரிய நிறுவனங்களில் சேர்ந்தேன். ஆனால் திடீரென குர்கானில் மோமோஸ் தள்ளுவண்டியைத் தொடங்கியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டனர்,” என்றார் பூஜா.

​​மோமோஸ்களை எவ்வாறு விற்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில் கிடோர்னியில் வேலையைத் தொடங்கியபோது, ​​மோமோஸ் வியாபாரத்தில் முறையான வணிகம் இல்லை.


ஆரம்ப நாட்களில், பூஜா பல கடினமான சவால்களை எதிர்கொண்டார். யாரும் அவரை வழிநடத்தவில்லை, ஆனால் இன்று அவரது குழுவில் இரண்டு டஜன் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு பார்ட்டிக்கு மூன்று முதல் நான்கு லட்சம் வரை மோமோஸ்களை அனுப்பிவைப்பதாக குறிப்பிடுகிறார் பூஜா.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.