‘முதியோர்களின் உற்ற நண்பன்’ - ரத்தன் டாடா முதலீட்டில் தொடங்கப்பட்ட Goodfellows
தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு துணையை கொடுத்து பராமரிக்கும் சாந்தனு நாய்டு தொடங்கியுள்ள Goodfellows என்ற ஸ்டார்ட்-அப்-க்கு ரத்தன் டாடா வெளியிடப்படாத முதலீட்டை செய்து ஆதரவு வழங்கியுள்ளார்.
தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ’Goodfellows' என்ற ஸ்டார்ட்-அப், ரத்தன் டாடாவின் ஆரம்பகால முதலீட்டு மற்றும் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஷாந்தனு நாயுடு நிறுவியுள்ளார். இவர் பல ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா வழிகாட்டுதலுடன் இருந்து வருகிறார்.
’Goodfellows' அறிமுக நிகழ்வில் பேசிய ரத்தன் டாடா,
"குட்ஃபெலோஸ் இரண்டு தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பின் அர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது இந்தியாவில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைத் தீர்க்க உதவுகின்றது. Goodfellows-ல் உள்ள இளம் குழு வளர என் முதலீடு உதவும் என்று நம்புகிறேன்," என்றார்.
கடந்த ஆறு மாதங்களாக, குட்ஃபெல்லோஸ் மும்பையில் உள்ள 20 வயதானவர்களைக் கொண்ட குழுவுடன் தங்கள் சேவையின் பீட்டா பதிப்பை சோதனை செய்து வருகிறது. இந்த பைலட்டின் வெற்றியின் மூலம், நிறுவனம் தனது சேவைகளை புனே, சென்னை மற்றும் பெங்களூருவிற்கும் விரிவுபடுத்த உள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள 800க்கும் மேற்பட்ட இளம் பராமரிப்பாளர்களைக் கொண்டிருப்பதாக நிறுவனம் கூறுகிறது.
Goodfellows ஸ்டார்ட்அப் நிறுவனர் சாந்தனு நாயுடு கூறுகையில்,
"தோழமை என்பது வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமான விஷயங்களைக் குறிக்கிறது. சிலருக்கு சேர்ந்து திரைப்படம் பார்ப்பது, கடந்த காலக் கதைகளைச் பேசுவது, நடைப்பயணம் செல்வது அல்லது ஒன்றாக எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பது போன்றவற்றைக் குறிக்கலாம். இந்த அனைத்திற்கும் இடமளிக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதன் பீட்டா கட்டத்தில், வயதானவர்கள் குட்ஃபெலோக்களுடன் எவ்வளவு இயல்பாக பிணைக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்," என்றார்.