Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வயதானவர்களை உலகம் சுற்றும் வாலிபர்கள் ஆக்கும் ட்ராவெல் நிறுவனம்!

வசதிகள் இருந்தும் தனியர்களாகிவிட்ட மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான உலகப் பயண அனுபவத்தைத் தருகிறது ‘சீனியர் வேர்ல்டு’ டிராவல் ஸ்டார்ட்-அப் நிறுவனம்.

வயதானவர்களை உலகம் சுற்றும் வாலிபர்கள் ஆக்கும் ட்ராவெல் நிறுவனம்!

Wednesday May 31, 2023 , 2 min Read

சம்மர் மற்றும் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால், பெரும்பாலும் வீட்டில் உள்ள சின்னஞ்சிறுசுகள் பெற்றோர்களுடன் ஊருக்கு போவது, வேகேஷன் ப்ளான்ஸ் என ஜாலியாக சென்றுவிடுவார்கள்.

ஆனால், குடும்பத்தில் உள்ள முதியோர்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்குவது தான் வழக்கமாகிவிட்டது. இன்னும் சில முதியோர்களோ மகன், மகள்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடுவதால் சீனியர் சிட்டிசன் குடியிருப்புகளில் தனிவாசம் புரிகின்றனர்.

முதியவர்கள் அதிகபட்சம் அருகில் இருக்கும் கோயில்களுக்குச் செல்கிறார்கள் அவ்வளவுதான். மற்றபடி, அடுக்குமாடி குடியிருப்புகளில் 17-வது மாடியிலோ 18-வது மாடியிலோ வாசம் செய்வதால் எல்லாம் வீட்டுக்கே வந்து விடும். வாழ்க்கை மிகவும் குறுகிப் போய்விட்டது இவர்களுக்கு.

ஆனால், இதோ மூத்தக் குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி.

senior world

வயதானவர்களை வாலிபர்களாக்கும் முயற்சி

வயதானவர்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும் வகையில் ஹரியானாவைச் சேர்ந்த எம்.பி தீபு மற்றும் ராகுல் குப்தா ஆகியோர் மூத்த குடிமக்களுக்காக ‘சீனியர் வேர்ல்டு’ (SeniorWorld) என்ற நிறுவனத்தை நடத்தி, அதில் வயதானோருக்கு உலகப் பயண வாய்ப்புகளை வழங்குகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களுக்காக 2015ல் நிறுவப்பட்டதுதான் SeniorWorld. 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான பயணச் சேவைகளைத் தனிப் பயனாக்குகிறது இந்நிறுவனம். இதுவரை 5,000 மூத்த குடிமக்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறது. தீபு சொல்வது இதுதான்:

“பயணம் என்பது வயதானவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இவர்கள் ஓய்வுபெற்று தங்கள் கடமைகளைச் செய்தவர்கள். ஆனால், சொந்தமாகப் பயணம் செய்யும் திறன் இல்லாதவர்கள். துரதிர்ஷ்டவசமாக, குடும்பங்கள் தனித்தனியாக மாறிக் கொண்டிருப்பதால் அவர்களின் பிள்ளைகளும் அவர்களுடன் தங்குவதில்லை. பெற்றோருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.”

இத்தகையோரின் தேவைகளை மனதில் நிறுத்தி, இந்நிறுவனம் பயணத் திட்டத்தை நிர்வகிக்கிறது.

"இந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தவர்கள் பயணம் செய்கிறார்கள், சாகச விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள், நித்திய நிரந்தரமான வேலைகளிலிருந்து மீள்கிறார்கள். மேலும், கலை, பாடல், நடனம், தொழில்நுட்பம் மற்றும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
tour

பிரயாணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளுக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதன்மூலம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகிறது என்று கூறும் தீபு,

“பெற்றோர் எங்கு இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் அவர்களது வாரிசுகளுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி விடுகிறோம்,” என்றார்.

இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, பூட்டான், வியட்நாம், தாய்லாந்து, சிங்கப்பூர், கென்யா, துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு மூத்தக் குடிமக்கள் இந்த நிறுவனத்தின் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர்.

tourism

மேலும், வடகிழக்கு, ராஜஸ்தான், கேரளா. லே, லடாக் உட்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் மூத்த குடிமக்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

உண்மையில் வசதி மிகுந்த, ஆனால் தனியர்களாகிவிட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த நிறுவனம் ஒரு வரப்பிரசாதம்தான்!


Edited by Induja Raghunathan