தனி கிரிப்டோ சட்டம்; டிஜிட்டல் சொத்துக்களை ஒழுங்குப்படுத்த துபாய் அரசின் அடுத்த திட்டம்!
உலக நாடுகள் அனைத்தும் கிரிப்டோகரன்சியை எவ்வாறு கையாள்வது என திண்டாடி வந்த நிலையில், துபாய் வோல்டு டிரேட் சென்டரை Crypto Zone ஆக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது. தற்போது உலக நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சியாக கிரிப்டோவிற்கு என தனி சட்டத்தை துபாய் அரசு இயற்றியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கிரிப்டோகரன்சியை எவ்வாறு கையாள்வது என திண்டாடி வந்த நிலையில், துபாய் வோல்டு டிரேட் சென்டரை Crypto Zone ஆக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது. தற்போது உலக நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சியாக கிரிப்டோவிற்கு என தனி சட்டத்தை துபாய் அரசு இயற்றியுள்ளது.
கடந்த 9ம் தேதி, துபாயின் பிரதம மந்திரியும் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“டிஜிட்டல் சொத்துக்களை வர்த்தகம் செய்வதற்கான ஒழுங்குமுறை முன்னுதாரணத்தை அமைக்கும் புதிய கிரிப்டோ சட்டத்தை துபாய் ஏற்கும் என்று அறிவித்தார். இச்சட்டம் வணிகர்களை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.”
"உலகின் சிறந்த வணிகச் சூழலின் மேம்பாட்டை மேற்பார்வையிட, ஒழுங்குமுறை, உரிமம், ஆளுகை மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவிய நிதி அமைப்புகளுக்கு ஏற்ப மெய்நிகர் சொத்துக்களுக்கான ஒரு சுயாதீனமான அதிகாரத்தை நாங்கள் நிறுவியுள்ளோம்,” என துபாய் பிரதமர் அறிவித்துள்ளார்.
- புதிய கிரிப்டோ சட்டத்தின்படி, துபாய் குடிமக்கள் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன் VARA எனப்படும் துபாய் மெய்நிகர் சொத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். டிஜிட்டல் சொத்துக்கள் தொடர்பாக இயங்கும் வணிகங்களுக்கும் துபாய் அரசு அனுமதி அளிப்பதாக புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- துபாய் சர்வதேச நிதி மையமான VARA-வைத் தவிர்த்து, செக்யூரிட்டீஸ் அண்ட் காமாடிட்டிஸ் அத்தாரிட்டி மற்றும் துபாய் வோல்டு டிரேட் சென்டர் Crypto Zone அமைப்பும் சிறப்பு வளர்ச்சியை மேற்பார்வையிட உள்ளது.
- துபாயில் மெய்நிகர் சொத்து சட்டத்தை அங்கீகரிப்பது மற்றும் மெய் நிகர் சொத்து ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவது ஆகியன ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலையை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கியப் படியாகும், இது இந்தத் துறையின் வளர்ச்சிக்கும் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.
- புதிய சட்டத்தின்படி, துபாய் உலக வர்த்தக மையத்தின் இயக்குநர்கள் குழு சட்டத்தை மீறினால் தேவையான முடிவை எடுக்கும் மற்றும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், மேலும், அவர்களின் வணிக உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- புதிய கிரிப்டோ சட்டத்தில் எந்த குறிப்பிட்ட கிரிப்டோ தொடர்பான சொத்துக்கள் சேர்க்கப்படும் என்பது குறித்த தெளிவான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.. கடந்த சில ஆண்டுகளாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிப்டோ மற்றும் நிதி கண்டுபிடிப்புகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. திய கட்டமைப்பின் மூலம் துபாய்க்கு புதிய வர்த்தகம் கிடைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர் - பிரதிக்ஷா BU | தமிழில் - கனிமொழி