Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

34 வயதில் இளம் பில்லினியர்: தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட ரிஹானா!

34 வயதில் 1.4 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், ரிஹானா தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட அமெரிக்காவின் இளம் பில்லியனராக உருவெடுத்துள்ளார்.

34 வயதில் இளம் பில்லினியர்: தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட ரிஹானா!

Wednesday July 13, 2022 , 2 min Read

34 வயதில் 1.4 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், Rihanna தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட அமெரிக்காவின் இளம் பில்லியனராக உருவெடுத்துள்ளார்.

இசைக் கலைஞர், இசையமைப்பாளர், நடிகை, ஆடை அலங்கார அமைப்பாளர், தொழிலதிபர் என பன்முக திறமைகளுடன் வலம் வரும் ராபின் ரிஹானா ஃபென்ட்டி-னை இளம் வயதிலேயே சுயமாக பில்லியனராக முன்னேறிய பெண் (Self Made Women Billionaire) என ஃபோர்ப்ஸ் இதழ் அங்கீகரித்துள்ளது.

Rihanna

யார் இந்த ரிஹானா?

அழகு சாதன பிராண்ட்டான 'Fenty Beauty' 'ஃபென்டி பியூட்டி' நிறுவனம் ரிஹானா, உலகளவில் 250 மில்லியனுக்கும் அதிகமான இசைப் தொகுப்புகளை விற்பனை செய்துள்ள இசைக் கலைஞர்களில் ஒருவராக ஆவார். பெண்கள் இசைக்குழுவான 'காண்ட்ராஸ்டை' தனது 14வது வயதில் உருவாக்கியவர். ஃபோர்ப்ஸ் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து பிரபலங்களில் ரிஹானா இடம் பிடித்துள்ளார்.

Rihanna-வின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என Forbes கணித்துள்ளது.

ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, ஃபென்டி பியூட்டியின் இணை உரிமையாளரும், சாவேஜ் x ஃபென்டி உள்ளாடைகள் நிறுவனத்தின் பங்குதாரருமான ரிஹானா, தனது சொந்த முயற்சியால் பில்லியனர் ஆன முதல் இளம் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆண்டு பட்டியலில், ரிஹானா 40 வயதிற்குட்பட்ட ஒரே பெண் கோடீஸ்வரர் ஆவார்.

"பணம் என்பது எனக்கானது அல்ல; அதனைக் கொண்டு நான் வேறு ஒருவருக்கு உதவ முடியும் என்ற எண்ணமே என்னில் இருக்கும். இந்த உலகம் எப்போதுமே உங்களை தவறான விஷயங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வைக்கிறது. அது உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை இழக்கச் செய்கிறது.”

சுயமாக உருவான பெண்களின் பட்டியலில் Taylor Swift 570 மில்லியன் டாலர் நிகர மதிப்பும், Beyonce 450 மில்லியன் டாலர்களும், கிம் கர்தாஷியன் 1.8 பில்லியன் டாலர்களும் பெற்றுள்ளனர்.

ரிஹானாவின் நிகர மதிப்பைப் பொறுத்தவரை, அவரது இசை வெளியீடுகளுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் புதிய இசை ஆல்பத்திற்கு கிடைக்க உள்ள வரவேற்பு ஆகியவற்றை கணக்கிட்டு பார்க்கும் போது மதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rihanna

ரிஹானாவின் நிறுவனங்கள்:

Fenty (ஃபேஷன் ஹவுஸ்):

ரிஹானாவின் எல்விஎம்ஹெச் எதிர்பார்த்தபடி உயர்-பேஷன் வரிசையில் முன்னேறவில்லை. மேலும், சாவேஜ் x ஃபென்டி என்ற உள்ளாடை நிறுவனத்தில் ரிஹானா செய்த முதலீடும் ஆரம்பித்த வேகத்திலேயே மூடு விழா கண்டது.

Fenty Beauty (மேக்கப் பொருட்கள்):

Fenty Beauty ஆனது 2020 ஆம் ஆண்டில் $550 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வருவாயை ஈட்டியது, இதன் மொத்த மதிப்பீடு தோராயமாக $2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மொத்த வியாபாரத்தில் 50% ரிஹானாவுக்கு சொந்தமானது. மற்ற 50% Kendo வழியாக LVMH க்கு சொந்தமானது.

Fenty Skin (தோல் பராமரிப்பு):

ஃபென்டி பியூட்டி துணையாக Fenty Skin தொடங்கப்பட்டது.

Savage x Fenty (உள்ளாடை):

Savage x Fenty ஆனது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $1 பில்லியன் டாலர்கள் மொத்த மதிப்பீட்டை அடைந்தது. இதன் மூலம் நிகர மதிப்பான 3 பில்லியன் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 30 சதவீதம் ரிஹானாவை சாரும்.

தொகுப்பு - கனிமொழி