ஸ்மார்ட் கண்ணாடி உலகில் ஃபேஸ்புக்: ‘ரே-பான் ஸ்டோரிஸ்' ஸ்பெஷல் என்ன?
விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!
தற்போதைய நவீன டிஜிட்டல் உலகத்துக்கு ஏற்றவாறு கண் கண்ணாடியில் மாற்றம் கொண்டுவர ரே பான் கண்ணாடி நிறுவனத்துடன் சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியின் முதல் தயாரிப்பாக ‘ரே-பான் ஸ்டோரிஸ்’ என்ற ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி தற்போதைய ஸ்மார்ட் டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்ற வகையில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஃபேஸ்புக்,
“ரே-பான் ஸ்டோரிஸ் என்ற ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கண்ணாடியை கொண்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இசையை கேட்க முடியும். போன் அழைப்புகளை அட்டென்ட் செய்து பேச முடியும். மக்கள் தங்களின் குடும்பம் நட்பு வட்டாரத்தில் ஆக்டிவாக இருக்க இந்த கண்ணாடி உதவும்," என்று கூறியிருக்கிறது.
ஸ்மார்ட் கண்ணாடியின் ஸ்பெஷல்!
* புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
* ஓபன் இயர் ஸ்பீக்கர், மூன்று மைக்ரோ போன்கள் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளது.
* இந்த அம்சங்கள் மூலம் 30 செகண்ட் ஷார்ட் வீடியோக்களை உருவாக்க முடியும்.
* இந்த கண்ணாடியை பட்டன் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ முறையில் பயன்படுத்த முடியும்.
* 20 ஸ்டைல்களில் இந்த ஸ்மார்ட் கண்ணாடி கிடைக்கும். ஆன்லைன் மூலமாக மட்டுமே தற்போது ஆர்டர் செய்ய முடியும்.
* இந்த ஸ்மார்ட் கண்ணாடி மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்களை ஃபேஸ்புக் வியூ அப்ளிகேஷன் மூலமாக இம்போர்ட் செய்ய முடியும். அதன்மூலமாகவே எடிட் மற்றும் மற்ற சமூக வலைத்தளங்களில் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதன் விலை சுமார் 299 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.21,981 என்பது குறிப்பிடத்தக்கது.