சமூக வலைதளங்களால் விழிப்புணர்வா? சீரழிவா?
சென்னையில் நடக்கவிருக்கும் இந்த மாபெரும் விவாத நிகழ்ச்சிக்கு வந்து உங்களின் சமூகக்கடமைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பரப்பிடுங்கள்!
செய்தித்தாள், ரேடியோ, தொலைக்காட்சி என ஊடக பரிமாணம் அந்தந்த காலக்கட்டத்தில் ஏற்பட்டுக்கொண்டே இருந்துள்ளது. அந்த இன்றைய ரூபம் தான் சமூக ஊடகம். தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் உருவாகியுள்ள சமூக ஊடகம் இன்று எல்லாவித தொலைதொடர்பு வழிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வேகமான வளர்ச்சியை உலகமெங்கும் பெற்றிருப்பதே அதனை உற்றுநோக்க வைக்கிறது.
இன்று சாமானியன் முதல் சாம்ராஜியம் ஆளுபவர் வரை எல்லார் கைகளிலும் சமமாக வலம்வரும் ஸ்மார்ட்போன்கள் டிஜித்தல் யுகத்தில் இன்று இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதேப்போல் கணினிமயமாதலால், திரும்பிய இடமெல்லாம் சமூக வலைதளங்கள் இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது எனலாம்.
இத்தகைய வேக விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ள இச்சமூக ஊடகங்களால் மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆனால் அவற்றினை மக்களாகிய நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? அது உருவாக்கப்பட்டதன் உண்மையான பின்னணியில் இன்றும் வலம் வருகின்றதா? சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தோடு, எதிர்மறையான பல விஷயங்களில் சமூக வலைதளங்கள் குற்றஞ்சாட்டப்படுவது எதனால்? என்பன போன்ற பல கேள்விகள் உருவாகியுள்ள அளவிற்கு அதன் பங்கு இன்று மேலோங்கி நிற்கிறது.
இதனை கருத்தில் கொண்டே சென்னையைச் சேர்ந்த நிறுவனமான ‘ப்ராண்ட் அவதார்’ மக்களிடையே சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளனர். அதன் முக்கிய நோக்கம்:
- சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை பொறுப்புமிக்க பயனர்களாக மாற்றுதல், சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூகம் மற்றும் பதிவுகள் குறித்த நேர்மறையான அணுகுமுறையை உருவாக்குதல்.
- வீடியோக்கள்/பதிவுகள், குறிப்பாக பெண்கள் குறித்த வீடியோக்கள், சம்பவங்கள் போன்றவற்றை கவனத்துடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற மனநிலையை ஏற்படுத்துதல்
- பயனர்கள் முடிந்தவரை நேர்மறையான விஷயங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளவேண்டும் என ஊக்குவித்தல்
- உண்மையான மற்றும் போலியான செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுதல்
- சமூக ஊடகங்களில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
இப்படி முக்கிய குறிப்புகளுடன் விவாதிக்கவுள்ள நிகழ்ச்சியாக, “சமூக வலைதளங்களால் விழிப்புணர்வே! சீரழிவே!” என்ற தலைப்பில் சென்னையில் வரும் 23ம் தேதி மாலை 3 மணி முதல் வடபழியினியில் உள்ள SIMS Auditorium-ல் மக்கள் முன்னிலையில் விவாதம் மற்றும் வல்லுனர்களின் உரையாடல்கள் நடைப்பெற உள்ளது. இந்நிகழ்வின் ஆன்லைன் மீடியா பார்ட்னராக யுவர்ஸ்டோரி தமிழ் உள்ளது.
இதில் வரவிருக்கும் சிறப்புப் பேச்சாளர்கள்: நடிகை கஸ்தூரி, Dr.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், சைபர் குற்றவியல் நிபுணர் மற்றும் சமூக ஊடக வல்லுனர் ப்ரைம்பாயிண்ட் ஸ்ரீனிவாசன், நேச்சுரல்ஸ் நிறுவனர் சிகே குமாரவேல், யூட்யூப் விமர்சகர் ஜாக்கி சேகர்.
இது தவிர, ஆன்லைன் ஊடகத்தில் பணிபுரியும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களும் இந்நிகழ்ச்சியில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். மாற்றம் ஃபவுண்டேஷன் இணை நிறுவனர் உதய் சங்கர், SIMS மருத்துவமனை துணை தலைவர் Dr.ராஜு சிவசாமி, ஸ்மைல் சேட்டை இணை நிறுவனர் ராம் குமார் மற்றும் யுவர்ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுனாதன் ஆகியோர் இதில் அடங்குவர்.
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே; இந்த உரையாடல்களை ஒருங்கிணைத்து, வழிநடத்தவுள்ளார் தந்தி டிவி முன்னாள் ஆசிரியரும், புதிதாக களம் இறங்கும் சமூக ஊடகமான ’சாணக்யா’-ன் நிறுவனர் மற்றும் சிஇஒ ரங்கராஜ் பாண்டே ஆகும்.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை முதல் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் வரை ஆன்லைனில் வெளிவரும் செய்திகள், மெசேஜ்கள், உள்ளடக்கங்கள் பற்றியெல்லாம் பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடைப்பெற உள்ளது.
இன்னும் எதுக்கு வெயிட்டிங்..? போன் எடுங்க உடனே ரெஜிஸ்டர் பண்ணுங்க...!
இந்த நிகழ்ச்சிக்கு வர விரும்புவோர் 8939332141 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம்...
சமூக ஊடகத்தில் தங்களின் சமூகக்கடமைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பரப்பிட அனைவரும் வாருங்கள்!