பார்வையற்ற குழந்தைகளுக்கு கல்வி ஒளி கொடுக்கும் இளம் மென்பொறியாளர் கோமதி!
கோமதி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பார்வையற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகின்றனர்.
கோமதி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பார்வையற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகின்றனர்.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என கல்வி கற்றுக்கொடுப்பவர்களை கடவுளுக்கு நிகராக போற்றுவது உண்டு. அதிலும் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கோமதி மற்றும் அவர்களது நண்பர்களும் கல்வி கற்பித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த கே.கோமதி, பள்ளிப்பருவத்தில் இருந்தே அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். பள்ளி நேரம் முடிந்ததும் தனது குடும்பத்தினர் நடத்தி வந்த சாலையோர உணவகத்தில் வேலை செய்வார். அங்கு தட்டுக்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வார்.
அரசுப் பள்ளியில் படித்து பொறியியல் பட்டம் பெற்றவரான கோமதி, தற்போது ஜெர்மனியில் உள்ள நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
கோமதி தனது படிப்பை முடிக்க சிரமங்களை எதிர்கொண்டவர் என்பதால், உதவி தேவைப்படுபவர்களை, குறிப்பாக அவர்களின் கல்விக்காக போராடும் குழந்தைகளைத் தேடித் தேடி உதவுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படித்தான் கோமதிக்கு சென்னையில் உள்ள தோழி ஒருவர் மூலமாக பார்வையற்ற குழந்தைகளின் தொடர்பு கிடைத்தது.
முதலில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் திணறிய மாணவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். அதன் மூலமாக அவர்களது அன்றாட பிரச்சனைகள் கோமதியின் கவனத்திற்கு வர ஆரம்பித்தது.
முதலாவதாக, இடைநிற்றலை தடுக்க பார்வையற்றவர்களுக்கு கல்வி கற்க உதவ முன்வந்தார். இறுதியில், வங்கித் தேர்வுகள் மற்றும் UPSC தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான முக்கியமான ஆய்வுப் பொருட்களை ஆடியோ புத்தகங்களாக மாற்றத் தொடங்கினார். கோமதி பார்வையற்ற குழந்தைகளுக்காக குறிப்பாக சுகாதார முகாம்கள் மற்றும் பட்டறைகளை ஏற்பாடு செய்தார்.
தற்போது பார்வையற்ற மாணவர்களுக்காக போட்டித்தேர்வு புத்தகங்களை ஆடியோ புத்தகமாக மாற்றி வரும் கோமதி கூறுகையில்,
"இந்த நடவடிக்கைகள் மாணவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன,” என்றார்.
கோமதியின் இந்த முயற்சியில் அவரது நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன் பார்வையற்ற நபர்களுக்கு உதவும் வகையிலான 300 ஆடியோ பதிவுகளை தயாரித்துள்ளார்.
“அவர்களின் கல்வியில் நாம் அவர்களை ஆதரித்தால், அவர்கள் எதற்கும் யாரையும் நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் முழு நம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்,” என்கிறார்.
2018ல் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேரவையின் உதவியுடன் ‘பெரியார் எங்கும்’ என்ற புத்தகத்தின் ஆடியோ பதிப்பை வெளியிட்டார் கோமதி. இந்த வெளியீட்டு நிகழ்வு எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது, சுமார் 25 முதல் 50 பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர்.
"புத்தகத்தில் 1,000 பக்கங்கள் உள்ளன, அவை ஆடியோ கோப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தக் கோப்புகள் 394 அத்தியாயங்களுடன் 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன.”
கோமதி மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் பார்வையற்ற சமூகத்தை, குறிப்பாக குழந்தைகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், புத்தகங்களை ஆடியோ கோப்புகளாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
"இந்திய வரலற்றில் பகவத் கீதை' என்ற புத்தகத்தை ஆடியோ வடிவமாக மாற்றும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இது தவிர, அமெரிக்காவில் ஒரு தமிழ் குழுவால் நிறுவப்பட்ட ‘எங்கள் கிராமம் எங்கள் பொறுப்பு’ என்ற குழுவிலும் அங்கம் வகித்து வருகிறோம்.”
மேலும், ஏழை விவசாய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கவும், அவர்களின் கல்விக்கு உதவவும் தமிழ்நாடு மாநிலத்தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார். தற்போது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுவிலிருந்து உதவி பெறுகின்றனர். ஏழை மற்றும் ஆதரவற்ற விவசாயக் குடும்பங்களுக்காக 36 பசுக்களையும் வழங்கியுள்ளனர்.
மார்ச் 2018ம் ஆண்டு மலேசியாவில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் குழுவான ஐயாய் என்ற குழுவினரால் கோமதிக்கு “சுடர் ஒலி” விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆட்டிசம், பார்வையற்ற மாற்றுத் திறனாளி சிறுவர்களை மேடைப் பாடகர்கள் ஆக்கும் பின்னணிப் பாடக நண்பர்கள்!