ஸ்ரீராமாயண யாத்திரை: அயோத்தி டூ ராமேஸ்வரம் வரை ஸ்பெஷல் டூர் பற்றி தெரியுமா?
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி நடுத்தர மக்களின் ஆன்மீக சுற்றுலா ஆசையை நிறைவேற்றும் விதமாக பல்வேறு டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலான ஆன்மீக சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி நடுத்தர மக்களின் ஆன்மீக சுற்றுலா ஆசையை நிறைவேற்றும் விதமாக பல்வேறு டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலான ஆன்மீக சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீராமாயண யாத்திரை:
இந்தியாவில் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகை காலத்தை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC), ‘ஸ்ரீ ராம் யாத்ரா’ (ஸ்ரீ ராமாயண யாத்திரை) என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சுற்றுலா பேக்கேஜ் பகவான் ராமர் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களையும் உள்ளடக்கியது. இதுகுறித்து ஐஆர்சிடிசி ட்விட்டரில்,
“ராமருடன் தொடர்புடைய புனிதத் தலங்களுக்குச் சென்று பக்தியில் மூழ்குங்கள். இந்த ஐஆர்சிடிசியின் #BharatGaurav ரயில் பயணத் தொகுப்பை முன்பதிவு செய்யவும்,” எனப் பதிவிட்டுள்ளது.
ஸ்ரீ ராமாயண யாத்ரா டூர் பேக்கேஜ் என்பது டெல்லி, அயோத்தி, ஜனக்பூர், சீதாமர்ஹி, பக்சர், வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் மற்றும் பத்ராசலம் போன்ற இடங்களை உள்ளடக்கிய 17-இரவு மற்றும் 18-நாள் நீண்ட பேக்கேஜ் ஆகும்.
டூர் பேக்கேஜில் இடம் பெற்றுள்ள இடங்கள்:
நவம்பர் 18, 2022 அன்று தொடங்கும் இந்த சுற்றுலா பேக்கேஜ் 17 இரவுகள் மற்றும் 18 நாட்களைக் கொண்டது.
அயோத்தி: ராம ஜென்மபூமி கோவில், ஹனுமான் கர்ஹி, சரயுகாட்.
நந்திகிராம்: பாரத்-ஹனுமான் கோயில் மற்றும் பாரத் குண்ட்
ஜனக்பூர்: ராம்-ஜாங்கி மந்திர்.
சீதாமர்ஹி: சீதாமர்ஹி மற்றும் புனௌரா தாமில் உள்ள ஜானகி மந்திர்.
பக்சர்: ராம் ரேகா காட், ராமேஸ்வர நாத் கோவில்.
வாரணாசி: துளசி மானஸ் கோவில், சங்கட் மோகன் கோவில், விஸ்வநாதர் கோவில் & கங்கா ஆரத்தி.
சீதா சமாஹித் ஸ்தல், சீதாமர்ஹி: சீதா மாதா கோவில்.
பிரயாக்ராஜ்: பரத்வாஜ் ஆசிரமம், கங்கா-யமுனா சங்கம், ஹனுமான் கோவில்.
சிருங்காவேர்பூர்: ஸ்ரீங்கே ரிஷி சமாதி & சாந்தா தேவி கோயில், ராம் சௌரா.
சித்ரகூட்: குப்த கோதாவரி, ராம்காட், சதி அனுசுயா கோவில்.
நாசிக்: த்ரயம்பகேஷ்வர் கோவில், பஞ்சவடி, சிதாகுஃபா, காலாராம் கோவில்.
ஹம்பி: அஞ்சனாத்ரி மலை, விருபாக்ஷா கோவில் & விட்டல் கோவில்.
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவில் மற்றும் தனுஷ்கோடி
பத்ராசலம்: ஸ்ரீ சீதாராம் சுவாமி கோவில், அஞ்சனி சுவாமி கோவில்
டெல்லி சப்தர்ஜங், காசியாபாத், அலிகார், துண்ட்லா, கான்பூர் சென்ட்ரல் மற்றும் லக்னோ சந்திப்பு ஆகிய இடங்களில் தங்க்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரங்கனா லட்சுமிபாய், ஆக்ரா கான்ட், மதுரா சந்திப்பு மற்றும் டெல்லி சஃப்தர்ஜங் ஆகியவை சுற்றுப்பயணத்தின் டி-போர்டிங் நிலையங்கள் ஆகும்.
கட்டண விவரம்:
18 நாள்கள் கொண்ட இந்த யாத்திரை பயணத்திற்கு கம்ஃபர்ட், சுப்பீரியர் என இரு வகைகள் உள்ளன.
கம்ஃபர்ட்டில் சிங்கிள் நபருக்கு 68,980 ரூபாயும், இரண்டு அல்லது 3 நபர்களுக்கு 59,980 ரூபாயும் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு 53,985 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பீரியர் சிங்கிள் நபருக்கு 82,780 ரூபாயும், இரண்டு அல்லது 3 நபர்களுக்கு 71,980 ரூபாயும் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு 64,785 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து வசதிகளும் இதில் அடங்கும்.
டூர் பேக்கேஜ் உள்ள வசதிகள்:
பாரத் கௌரவ் ரயிலில் 3 ஏசியில் பயணம், ஹோட்டல், உணவு, சுற்றிப்பார்ப்பது, இடமாறுவது, வரிகள், பயணக் காப்பீடு மற்றும் ரயிலில் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். இருப்பினும், இந்த சுற்றுலாவில் ஐஆர்சிடிசி சைவ உணவை மட்டுமே வழங்க உள்ளது.
எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள்:
ஸ்ரீ ராமாயண யாத்திரையில் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
முன்பதிவு செய்வது எப்படி?
ஸ்ரீ ராமாயண யாத்திரை சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அவற்றின் பிராந்திய வசதிகள் மையங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.