2.1 மில்லியன் டாலர் நிதி திரட்டியது சென்னை ஸ்டார்ட் அப் IppoPay!
சென்னையைச் சேர்ந்த நிதி நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான இப்போபே (IppoPay), காயின்பேஸ் வென்சர்ஸ், பெட்டர் கேபிடல், ப்ளும் பவுண்டர்ஸ் ஃபண்ட் மற்றும் முன்னணி தேவதை முதலீட்டாளர்களிடம் இருந்து 2.1 மில்லியன் டாலர் விதை நிதி பெற்றுள்ளது.
கிராமப்புற இந்தியாவுக்கான வங்கிச் சேவைகளை வழங்கும் ’இப்போபே’ (IppoPay) காயின்பேஸ் வென்சர்ஸ், பெட்டர் கேபிடல், ப்ளும் பவுண்டர்ஸ் ஃபன்ட் மற்றும் முன்னணி ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து 2.1 மில்லியன் டாலர் விதை நிதி பெற்றுள்ளது.
2020 நவம்பர் மாதம் நிறுவப்பட்ட சென்னையைச் சேர்ந்த ’இப்போபே’ நிறுவனம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் தினமும் வருமானம் பெறுபவர்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளும் வகையில் சேவை அளித்து வருகிறது.
நியோ வங்கிகள் பிரிவில் வரும் இப்போபே, வணிகர்களுக்கு வர்த்தக வங்கி கணக்கு, டெபிட் கார்டு, பணப் பரிவர்த்தனை வசதி ஆகியவற்றை அளிக்கிறது. தற்போது கிடைத்துள்ள நிதியை, தனது தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள உதவும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வாடிக்கையாளர் அனுபவத்தில் உள்ள சிக்கலை குறைக்கும் அதே நேரத்தில் வணிகர்கள் தங்கள் வருவாய், லாபத்தை 10 மடங்கு அதிகரித்துக்கொள்ள உதவுவது தான் எங்கள் நோக்கம்,” என்று இப்போபே சி.இ.ஓ மோகன்.கே தெரிவித்துள்ளார்.
“இப்போபே பயணத்தில் காயின்பேஸ் வென்சர்ஸ், ப்ளும் வென்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிறுவனத்தின் நோக்கத்தில் துவக்கத்திலேயே முதலீடு செய்தோம்,” என்று நிதிநுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் பெட்டர் கேபிடல் நிறுவனத்தின் வைபவ் டோம்குந்த்வார் தெரிவித்துள்ளார்.
“பணப் பரிவர்த்தனை மற்றும் கடன் பிரிவில் செயல்படும் நிறுவனங்கள் வெற்றி பெற்ற குறிப்பிட்ட பிரிவில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று ப்ளும் பவுண்டர்ஸ் ஃப்ண்ட் சரிதா ரைச்சுரா கூறியுள்ளார்.