Stock News: ஏறுது, இறங்குது; இந்திய பங்குச்சந்தை இன்றைய நிலவரம் என்ன?
இந்திய பங்குச்சந்தைகளின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற, இறங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று காலை முதலே இறங்கு முகத்தில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தைகளின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற, இறங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று காலை முதலே இறங்கு முகத்தில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 236.22 புள்ளிகள் சரிந்து 56,872 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 72.25 புள்ளிகள் சரிந்து 16,935 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி வங்கி குறியீடுகள் தலா 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்ததால் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.
காரணம்: பணவீக்கத்திற்கு எதிரான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்க பொருளதாராம் மேலும் சரிவடையக்கூடும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி, பங்கு விற்பனை அதிகரிப்பு போன்ற காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டாக்டர் ரெட்டீஸ்
சன் பார்மா
விப்ரோ
இன்ஃபோசிஸ்,
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி
ட்வின்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐடிசி
இண்டஸ்இண்ட் வங்கி
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் குறைந்து 81.93 ரூபாயாக உள்ளது.