Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச்சந்தை இன்று சற்றே சரிவுடன் தொடக்கம்... காரணம் என்ன?

மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாயன்று (2-04-2024) வர்த்தகத்தை சற்றே பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.

Stock News: பங்குச்சந்தை இன்று சற்றே சரிவுடன் தொடக்கம்... காரணம் என்ன?

Tuesday April 02, 2024 , 1 min Read

மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாயன்று (2-04-2024) வர்த்தகத்தை சற்றே பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.

தேசியப் பங்குச் சந்தை என்.எஸ்.இ. நிஃப்டி 50 பங்குகள் 25.60 புள்ளிகள் அல்லது 0.11% குறைந்து 22,436 புள்ளிகளுடன் உள்ளது. பி.எஸ்.இ. சென்செக்ஸ் புள்ளிகள் சற்று முன் நிலவரப்படி 91.13 புள்ளிகள் அல்லது 0.12 % குறைந்து 73,923.42 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகின்றது.

பேங்க் நிப்டி குறியீடு 7.15 புள்ளிகள் அதிகரித்து 47,585.405 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. நிப்டி ஐடி 122.60 புள்ளிகள் குறைந்து 34,920 புள்ளிகளுடன் உள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 371.13 புள்ளிகள் அல்லது 0.83% அதிகரித்து 44,825.76 புள்ளிகளுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

குறைவான தொடக்கத்துக்குக் காரணம்:

ஆசியப் பங்குச்சந்தைகள் பொதுவாக குறைவான தொடக்கம் கண்டதாலும் அமெரிக்கத் தரவுகளின் படி அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் சுணக்கம் காட்டுகிறது என்ற செய்திகளினாலும் பங்குச் சந்தை இன்று சற்றே சுணக்கமாகத் தொடங்கியுள்ளன.
sensex

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

ஆதித்யா பிர்லா

ஹெச்.டி.எஃப்.சி. வங்கி

பாரத் எலெக்ட்ரானிக்ஸ்

வோல்ட்டாஸ்

ஷ்னெய்டர் இன்ஃப்ரா

அதானி போர்ட்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ்

டிவிஎஸ் மோட்டார்

என்.எச்.பி.சி.

இந்திய ரூபாயின் மதிப்பு:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 83.36 ஆக உள்ளது.