Stock News: இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு- காரணம் என்ன?
பலவீனமான சர்வதேச போக்குகளின் காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் சரிவு நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. பல முன்னணி நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
பலவீனமான சர்வதேச போக்குகள் காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை துவக்கின. சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவுடன் துவங்கின. தொடர்ந்து ஏற்ற இறக்கமான போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.18) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 101.13 புள்ளிகள் சரிந்து 80,582.97ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 36.85புள்ளிகள் சரிந்து 24,299.15 ஆக இருந்தது.
சரிவான துவக்கத்தால் 30 சென்செக்ஸ் பங்குகள், 18 பங்குகள் சரிவுடன் வர்த்தகம் ஆகின. டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட் கார்ப், எல் & டி உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன. சன் பார்மா, டெக் மகிந்திரா, எச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் ஏறுமுகம் கண்டன.
இன்று முற்பகல் 11.00 மணியளவில், சென்செக்ஸ் 254.61 புள்ளிகள் (0.32%) சரிந்து 80429.84 ஆகவும், நிஃப்டி 47.20 புள்ளிகள் (0.19%) வீழ்ச்சி கண்டு 24,288.80 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
சர்வதேச சந்தையின் பலவீனமான காரணிகள் சந்தையில் தாக்கம் செலுத்தின. மேலும், வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் முக்கிய கொள்கை முடிவின் எதிர்பார்ப்பில் எச்சரிக்கை அணுகுமுறையை மேற்கொண்டனர். எதிர்கால வட்டி குறைப்பு தொடர்பான அறிகுறிகள் எதிர்பார்ப்பில் அவர்கள் அமெரிக்க பங்குகளில் ஆர்வம் காட்டினர். அதே நேரத்தில் உள் நாட்டு அளவில் பெரிதாக எந்த காரணியும் தாக்கம் செலுத்தும் வகையில் அமையவில்லை. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் ஒரு சதவீத அளவு சரிவுடன் முடிந்தன.
ஏற்றம் காணும் பங்குகள்
சன்பார்மா
ரிலையன்ஸ்
எச்.சி.எல் டெக்
இறங்குமுகம் காணும் பங்குகள்
பவர்கிரிட் கார்ப்
டாடா மோட்டார்ஸ்
என்.டி.பி.சி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1பைசா குறைந்து ரூ. 84.92 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan