Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச் சந்தையில் ஏற்றமும் தடுமாற்றமும் நீடிப்பு...

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றமும் தடுமாற்றமும் மாறி மாறி நிலவுகிறது. இதனால், முதலீட்டாளர்களிடையே சற்றே குழப்பமான மனநிலையே தொடர்கிறது.

Stock News: பங்குச் சந்தையில் ஏற்றமும் தடுமாற்றமும் நீடிப்பு...

Thursday December 26, 2024 , 1 min Read

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றமும் தடுமாற்றமும் மாறி மாறி நிலவுகிறது. இதனால், முதலீட்டாளர்களிடையே சற்றே குழப்பமான மனநிலையே தொடர்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.26) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 425.5 புள்ளிகள் உயர்ந்து 78,898.37 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 123.85 புள்ளிகள் உயர்ந்து 23,851.50 ஆக இருந்தது.

வர்த்தகம் தொடங்கும்போது பங்குச் சந்தை ஏறுமுகமாக இருந்தது, முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கூட்டியது. ஆனால், அதன்பின், ஏற்றமும் இறக்கமுமாக நிலையற்ற நிலையே நீடிக்கிறது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 49.27 புள்ளிகள் (0.06%) உயர்ந்து 78,522.14 ஆகவும், நிஃப்டி 32.30 புள்ளிகள் (0.14%) உயர்ந்து 23,759.95 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வர்த்தகம் நடைபெறவில்லை. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஹாங்காங், சியோல் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. அத்துடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் சாதக நிலை காணப்படுகிறது.

bse

ஏற்றம் காணும் பங்குகள்:

மாருதி சுசுகி

எம் அண்ட் எம்

டாடா மோட்டார்ஸ்

எஸ்பிஐ

பாரதி ஏர்டெல்

பஜாஜ் ஃபின்சர்வ்

ஐடிசி

விப்ரோ

கோடக் மஹிந்திரா பேங்க்

இண்டஸ்இன்ட் பேங்க்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஹெச்டிஎஃப்சி பேங்க்

டைட்டன் கம்பனி

எல் அண்ட் டி

இஃன்போசிஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டெக் மஹிந்திரா

டாடா ஸ்டீல்

இந்திய ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து ரூ.85.25 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan