Stock News: பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 1000+ புள்ளிகள் சரிவு!
இந்திய பங்குச் சந்தையில் இன்று வியாழக்கிழமை (3-10-24) வர்த்தகத்தில் திடீரென கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் இன்று வியாழக்கிழமை (3-10-24) வர்த்தகத்தில் திடீரென கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 704 புள்ளிகள் சரிந்து 83,561 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 231 புள்ளிகள் சரிந்து 25,565 ஆக இருந்தது.
சற்று முன் நிலவரப்படி, அதாவது காலை 10:20 நிலவரப்படி சென்செக்ஸ் 908 புள்ளிகள் சரிவடைந்து 83,357.99 புள்ளிகளாகவும் நிப்டி 50 குறியீடு 280 புள்ளிகள் சரிவடைந்து 25,516.70 புள்ளிகளாகவும் உள்ளது. நிப்டி பேங்க், நிப்டி ஐடி, மும்பைப் பங்குச் சந்தை ஸ்மால் கேப் ஆகியக் குறியீடுகள் உட்பட அனைத்துக் குறியீடுகளும் சரிவடைந்துள்ளன.
காரணம் என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப்பதற்றம் பெருகி வருவதாலும் பங்குச் சந்தை குறியீட்டின் டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் பங்குப் பரிவர்த்தனை விதிகளில் செய்த மாற்றங்களினாலும் பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவு கண்டுள்ளன. மேலும் சீன சந்தை லாபம் தரும் சந்தையாக இருப்பதால் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அந்தப் பக்கம் சாய்ந்துள்ளனர்.
ஹாங்காங் பங்குச் சந்தைகளிலும் முதலீடுகள் அதிகரித்துள்ளது. இருப்பினும் ஆட்டோ, மற்றும் டூவீலர் பங்குகள் செப்டம்பர் மாத விற்பனை வலுவினால் நன்றாகச் செல்கின்றன.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
ஹிண்டால்கோ
டாடா ஸ்டீல்
எஸ்பிஐ
ஓ.என்.ஜி.சி.
இறக்கம் கண்ட பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ்
எல் அண்ட் டி
ஆக்சிஸ் பேங்க்
மகீந்திரா அண்ட் மகீந்திரா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி
கோட்டக் மகீந்திரா பேங்க்
ஐசிஐசிஐ வங்கி
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து டாலர் ஒன்றிற்கு ரூ.83.93 ஆக இருந்தது.