Stock News: பங்குச் சந்தையில் தொடரும் ஏற்றம் - சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!
சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வில் தொடர்கின்றன.
சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வில் தொடர்கின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.16) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 595.42 புள்ளிகள் உயர்ந்து 77,319.50 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 178.45 புள்ளிகள் உயர்ந்து 23,391.65 ஆக இருந்தது.
கடும் வீழ்ச்சியில் இருந்து பங்குச் சந்தை மீண்ட பிறகு தொடர்ந்து பச்சை விளக்குடன் ஏறுமுகம் கண்டு வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கூட்டியுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 223.78 புள்ளிகள் (0.29%) உயர்ந்து 76,947.86 ஆகவும், நிஃப்டி 82.05 புள்ளிகள் (0.35%) உயர்ந்து 23,295.25 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் குறிப்பிடத்தக்க உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளதால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு நிலவுகிறது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
என்டிபிசி
ஆக்சிஸ் பேங்க்
டெக் மஹிந்திரா
பஜாஜ் ஃபைனான்ஸ்
பாரதி ஏர்டெல்
கோடக் மஹிந்திரா பேங்க்
மாருதி சுசுகி
ஐசிஐசிஐ பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இன்ஃபோசிஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
டிசிஎஸ்
டைடன் கம்பெனி
சன் பார்மா
விப்ரோ
ஐடிசி
நெஸ்லே இந்தியா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 4 பைசா குறைந்து ரூ.86.44 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan