Stock News: ஏற்றப்பாதையில் பங்குச்சந்தை - சென்செக்ஸ் 400+ புள்ளிகள் உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:09 மணி நிலவரப்படி 440 புள்ளிகள் உயர்ந்து 81,929.10. புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 126 புள்ளிகள் உயர்ந்து 25,108 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (10-10-2024) 400 புள்ளிகளுக்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளன. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:09 மணி நிலவரப்படி, 440 புள்ளிகள் உயர்ந்து 81,929.10 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 126 புள்ளிகள் உயர்ந்து 25,108 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 346 புள்ளிகள் உயர்ந்து 51,353 புள்ளிகளாக வர்த்தமாகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 234 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து 42,857 புள்ளிகளாக உள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் இன்று 502 புள்ளிகள் உயர்ந்து 56,613 புள்ளிகளாக உள்ளன.
காரணம்:
பொதுவாக ஆசியப் பங்குச் சந்தைகள் ஏற்றப்பாதையில் உள்ளதாலும் அமெரிக்கப் பங்குச் சந்தையின் உயர்வை அடியொட்டி இந்தியப் பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பவர் கிரிட்
எம் அண்ட் எம்
ஹெச்.சி.எல். டெக்
எல் அண்ட் டி
என்.டி.பி.சி
இறக்கம் கண்ட பங்குகள்:
அதானி எண்டர்பிரைஸ்
ட்ரெண்ட்
சிப்ளா
ஸ்ரீராம் பைனான்ஸ்
டாக்டர் ரெட்டீஸ் லேப்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகமிக லேசாக பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.96 ஆக உள்ளது.