கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் செய்துவிட்டு துறவறம் பூணும் செல்வந்தர்கள்!
கடந்த ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வைர வியாபாரியும் இவரது மனைவியும் தங்களுடைய சொத்துக்களை தான தர்மம் செய்து விட்டு சன்னியாசிகளாயினர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது 12 வயது மகனும் துறவியானர்.
கடந்த ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வைர வியாபாரியும் இவரது மனைவியும் தங்களுடைய சொத்துக்களை தான தர்மம் செய்து விட்டு சன்னியாசிகளாயினர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது 12 வயது மகனும் துறவியானர்.
ஜைன மத சமய தர்மத்தின் படி, இவர்கள் உலகத்தையும் அதன் செல்வங்களையும் பொருளுலகத்தையும் ஆசைகளையும் பாசங்களையும் துறக்க ‘தீஷை’ பெற்யுவார்கள். ஆனால், தீஷை பெறுவதற்கு ஃபெராரியிலும் ஜாகுவார் காரிலும் வருவார்கள் என்பது பெரிய நகை முரணே.
அதே போல், 2017-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜைன மத தம்பதியினர் சுமித் மற்றும் அனாமிகா ரூ.100 கோடி பெறுமான சொத்துக்களைத் துறந்து தீஷை பெற்று துறவிகளாயினர். சுமித்திற்கு வயது 35, அனாமிகாவின் வயது 34. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் மைனர். எனவே, இவர்கள் தீஷை பெறக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தடுக்க முயன்றனர். மகளை அத்ரதையாக விட்டு விட்டு இவர்கள் தீஷை பெறுவது மனித உரிமைக்கு எதிரானது என்று அவர்கள் வாதிட்டனர்.
மகள் இப்யாவுக்கு என்ன ஏற்பாடுகளை இவர்கள் செய்துள்ளனர் என்று குஜராத் மாநில அரசு குழந்தைகள் உரிமைகள் அமைப்பு சிவில் மற்றும் போலீசாரிடம் அறிக்கை சமரிப்பிக்கக் கோரியதும் கவனிக்கத்தக்கது. பிறகு இவர்கள் குழந்தை இப்யாவின் எதிர்காலத்துக்குரியதை ஏற்பாடு செய்து கொடுத்தது உறுதி செய்யப்பட்ட பின்பே தீஷை சாத்தியமானது.
மேலும், அனாமிகாவின் உறவினர் ஒருவர் குழந்தையை வளர்க்க தானே மனமுவந்து ஒப்புக் கொண்ட நற்செய்தியும் வெளியானது.
இதன் பின்னணியில் பார்த்தோமானால் சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக இன்னுமொரு குஜராத் தொழிலதிபரும் அவரது மனைவியும் ரூ.200 கோடி சொத்துக்களைத் துறந்து சன்னியாசம் பெற்றுக் கொண்டனர்.
இந்தத் தம்பதியினர் குஜராத் மாநிலம் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரி என்ற இந்த தொழிலதிபர் கட்டுமானத் தொழிலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 200 கோடி ரூபாய் சொத்துக்களை தான தர்மத்துக்கு எழுதி வைத்து விட்டு தீக்ஷை பெற்றார்.
இந்த தம்பதியினரின் 19 வயது மகள், 16 வயது மகள் இவர்களுக்கு முன்னரே 2022-ம் ஆண்டிலேயே துறவறம் மேற்கொண்டு விட்ட்னார், தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை என்ற பழமொழி தலைகீழாக்கப்பட்டு, வாரிசுகள் எவ்வழியோ பெற்றோர் அவ்வழி என்று இவர்கள் மகன், மகள் துறவறத்தினால் தாங்களும் துறவறம் மேற்கொண்டனர்.
ஜைன மத துறவற தர்மத்தின் ப,டி இவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது, அடுத்தவர் கொடுக்கும் உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும். மிகப்பெரிய வர்த்தக சமூகமான ஜெயின் சமூகத்தினர் தங்கள் மதத்தின் அறவொழுக்கங்களுக்கு ஏற்ப வாழ முடிவு செய்து வருவது ஜைன மதத் தலைவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு ஜைன சமூகமே இதனை எண்ணி பெருமைப் படுகிறது.
11 ஊழியர்களுக்கு சொகுசு கார் பரிசு; தஞ்சை ஐ.டி. நிறுவன நிறுவனர் கொடுத்த சர்ப்ரைஸ்!