Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: சென்செக்ஸ், நிப்டி தொடர் சரிவு முகம் - காரணம் என்ன?

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 27.78 புள்ளிகள் குறைந்து 78,754.46 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 7 புள்ளிகள் குறைந்து 23,988 புள்ளிகளாகவும் உள்ளன.

Stock News: சென்செக்ஸ், நிப்டி தொடர் சரிவு முகம் - காரணம் என்ன?

Tuesday November 05, 2024 , 1 min Read

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையான இன்று (5-11-2024) சரிவடைந்து வருகின்றன. சென்செக்ஸ் சுமார் 100+புள்ளிகள் பின்னடைவு கண்டது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 1.27% சரிந்தது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 27.78 புள்ளிகள் குறைந்து 78,754.46 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 7 புள்ளிகள் குறைந்து 23,988 புள்ளிகளாகவும் உள்ளன.

நிப்டி பேங்க் குறியீடு இன்று 87.15 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 2 புள்ளிகள் குறைந்தது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 37 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

காரணம்:

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வாபஸ் பெற்று வருகின்றனர். குறுகிய காலத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களும் அதிகம் பங்குகளை விற்று வருவதால் கடுமையாகச் சரிந்து வருகிறது, அனைத்திற்கும் மேலாக அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தின் நிச்சயமின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை முதலீட்டை குறைத்துள்ளனர்.

stock market

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

வாரீ எனெர்ஜீஸ்

பஜாஜ் ஆட்டோ

எச்.டி.எஃப்.சி. பேங்க்

எஸ்பிஐ

டாட்டா மோட்டார்ஸ்

வோடஃபோன் ஐடியா

இறக்கம் கண்ட பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஏபிபி இந்தியா

ஐசிஐசிஐ

பார்தி ஏர்டெல்

ட்ரெண்ட்

இந்திய ரூபாயின் மதிப்பு:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து இன்று ரூ.84.12 ஆக உள்ளது.