Stock News: சென்செக்ஸ் 200+ புள்ளிகள் உயர்வு - ஸ்மால் கேப் சரிவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 225 புள்ளிகள் உயர்ந்து 79,710.88 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 75 புள்ளிகள் உயர்ந்து 24,223.85 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (11-11-2024) சற்றே உயர்வுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் சுமார் 200க்கும் அதிகமான புள்ளிகள் உயர்ந்ந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 75 புள்ளிகள் உயர்ந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை10.29 மணி நிலவரப்படி, 225 புள்ளிகள் உயர்ந்து 79,710.88 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 75 புள்ளிகள் உயர்ந்து 24,223.85 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 186 புள்ளிகளும், நிப்டி ஐடி குறியீடு 446 புள்ளிகளும் உயர்வடைய பிஎஸ்இ ஸ்மால் கேப் 281 புள்ளிககள் பின்னடைவு கண்டுள்ளன. மும்பைப் பங்குச் சந்தையின் மிட் கேப் குறியீடு 0.6% பின்னடைவு கண்டது. ஐடி, ஆட்டோ செக்டார்கள் தவிர மற்ற செக்டார்கள் குறிப்பாக டெலிகாம், ஹெல்த்கேர், உலோகம் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் துறை பங்குகள் சரிவு கண்டன.
காரணம்:
ஐடி துறை மற்றும் ஆட்டோ துறை பங்குகளால் இன்று பங்குச் சந்தை முன்னேற்றத்துடன் காணப்படுகிறது. அன்னிய ஃபோர்ட்போலியோ முதலீட்டாளர்கள் நிலவரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
மாருதி சுசூகி
இன்ஃபோசிஸ்
டாடா மோட்டார்ஸ்
ஹெச்.சி.எல்.டெக்னாலஜீஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஏசியன் பெயிண்ட்ஸ்
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்ஸ்
ஓஎன்ஜிசி
ஹிண்டால்கோ
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவடைந்து இன்று ரூ.84.38ஆக உள்ளது.