Stock News: சென்செக்ஸ் 800+ புள்ளிகள் சரிவு; அனைத்துக் குறியீடுகளும் ரெட் - என்ன காரணம்?
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 893 புள்ளிகள் குறைந்து 78,830.69 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 288 புள்ளிகள் குறைந்து 24,016 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட் கிழமையான இன்று (4-11-2024) சரிவடைந்து வருகின்றன. சென்செக்ஸ் சுமார் 800 புள்ளிகள் பின்னடைவு கண்டது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 250 புள்ளிகள் சரிந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை10:05 மணி நிலவரப்படி 893 புள்ளிகள் குறைந்து 78,830.69 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 288 புள்ளிகள் குறைந்து 24,016 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று கடும் சரிவு கண்டு 326.75 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 237 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 1049 புள்ளிகளும் சரிந்தன
காரணம்:
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வாபஸ் பெற்று வருகின்றனர். குறுகிய காலத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களும் அதிகம் பங்குகளை விற்று வருவதால் கடுமையாகச் சரிந்து வருகிறது மற்றப் பங்குச் சந்தைகளில் உயர்வு நிலவரம் காணப்படுவதால் முதலீட்டாளர்கள் இங்கிருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதால் பங்குச் சந்தை கடும் சரிவு கண்டு வருகின்றது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
எம் அண்ட் எம்
சிப்ளா
டெக் மகீந்திரா
ஹெச்.சி.எல். டெக்
ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்
இறக்கம் கண்ட பங்குகள்:
சன் பார்மா
பஜாஜ் ஆட்டோ
இன்போசிஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதானி போர்ட்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.84.07 ஆக உள்ளது.