Stock News: சென்செக்ஸ் பின்னடைவுடன் தொடக்கம் - பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ் இந்த் வங்கி சரிவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 95 புள்ளிகள் குறைந்து 79,708.11 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 4 புள்ளிகள் குறைந்து 24,127.40 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (02-12-2024) சரிவு தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, சுமார் 150 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 24,100 புள்ளிக்குக் கீழ் குறைந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:00 மணி நிலவரப்படி, 95 புள்ளிகள் குறைந்து 79,708.11 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 4 புள்ளிகள் குறைந்து 24,127.40 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 158 புள்ளிகள் சரிந்தது. நிப்டி ஐடி குறியீடு 67 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 254 புள்ளிகளும் அதிகரித்துள்ளன. பஜாஜ் பைனான்ஸ், இந்தஸ் இந்த் வங்கிப் பங்குகள் பின்னடைவு கண்டன.
காரணம்:
உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் இதன் தாக்கம் ஆகியவை முதலீட்டாளர்களின் செண்டிமெண்ட்டிற்குக் காரணமாக அமைந்தது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அதானி கிரீன் எனெர்ஜி
ஸ்ரீராம் பைனான்ஸ்
மாருதி சுசூகி
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
கோல் இந்தியா
டாக்டர் ரெட்டீஸ் லேப்
இறக்கம் கண்ட பங்குகள்:
பிரிட்டானியா
ஹெச்.யு.எல்.
ஓ.என்.ஜி.சி.
எல் அண்ட் டி
டிசிஎஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.70 ஆக உள்ளது