Stock News: பங்குச் சந்தையில் புதிய எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு ஏன்?
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்ததன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் புதிய உச்சத்துடன் இன்று வர்த்தகம் தொடங்கியது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்ததன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் புதிய உச்சத்துடன் இன்று வர்த்தகம் தொடங்கியது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.19) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 735.95 புள்ளிகள் உயர்ந்து 83,684.18 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 209.55 புள்ளிகள் உயர்ந்து 25,587.10 ஆக இருந்தது.
இவ்வாறாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சத்தை அடைந்தபின்பு, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பாசிட்டிவ் வைப் உடன் தொடர்வது முதலீட்டாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
பிற்பகல் 12.10 மணியளவில் சென்செக்ஸ் 356.91 (0.43%) உயர்ந்து 83,305.13 ஆகவும், நிஃப்டி 68.60 புள்ளிகள் (0.14%) உயர்ந்து 25,446.15 ஆகவும் ஏற்றம் கண்டிருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி விகிதத்தை 50 bps அடிப்படையில் குறைத்துள்ளது, சர்வதேச அளவிலான பங்கு வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய பங்குச் சந்தைகள் பெரும்பாலும் சாதக அம்சங்களுடன் வர்த்தகம் ஆகிவருகின்றன. இவற்றின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டின் முதலீடு வெகுவாக உயர்ந்து வருகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
என்டிபிசி
நெஸ்லே இந்தியா
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
டைட்டன்
மாருதி சுசுகி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
சன் பார்மா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐடிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
டெக் மஹிந்திரா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இன்போசிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா உயர்ந்து ரூ.83.70 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan