Stock News: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு – தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை!
இந்திய பங்குச் சந்தையில் கடந்த 6 நாட்களாக ஏற்றம் நிலவி வருகிறது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. பங்குச்சந்தை தொடர் ஏற்றத்தால் கடந்த 6 வேலை நாட்களில் முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stock News: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு – தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்
இந்திய பங்குச் சந்தையில் கடந்த 6 நாட்களாக ஏற்றம் நிலவி வருகிறது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை தொடர் ஏற்றத்தால் கடந்த 6 வேலை நாட்களில் முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 25) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்து 78,642.02 புள்ளிகளாக ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 185.80 புள்ளிகள் உயர்ந்து 23,844.15 புள்ளிகளாக இருந்தது. 2024 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து முன்னேறி வருகிறது. முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் அமர்க்களமான வாரமாக அமைந்துள்ளது.
இன்று காலை 11 மணியளவில் சென்செக்ஸ் +159.41 புள்ளிகள் (0.20%) உயர்ந்து 78,1430.80 ஆகவும், நிஃப்டி 53.65 புள்ளிகள் (0.23%) உயர்ந்து 23,712 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் இந்தியப் பங்குச்சந்தையின் மீது திரும்பியுள்ளது வளர்ச்சிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாகத் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) சமீப நாட்களாக நிகர முதலீட்டாளர்களாக மாறியுள்ளனர். மார்ச் 21 அன்று FIIகள் ரூ.7,470 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினர், இது அவர்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமெண்ட்
கீஃபின்சர்வி
வினைல்இந்தியா
பர்ல்போலி
ஹட்சன்
கிராபைட்
பிரமல் பார்மா
டாடா டெக்னாலஜிஸ்
எச்சிஎல் டெக்னாலஜிஸ்
ப்ளூ டார்ட்
பஜாஜ் ஃபின்சர்வ்
இன்போசிஸ்
எல்&டி
எச்டிஎஃப்சி வங்கி
அம்புஜா சிமெண்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
கோத்ரேஜ் இந்தியா
இண்டஸ்இன்ட் வங்கி
ஜிண்டால் சா
சென்னை பெட்ரோ
டாக்டர். ரெட்டிஸ்
சிஎஸ்கே பார்மா
ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து ரூ.85.76 ஆக உள்ளது.