Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘தெரிந்த ப்ராண்ட்; தெரியாத கதை’ - 19ம் நூற்றாண்டில் தொடங்கி இன்று வரை ‘டாபர்’

இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமாக உள்ள டாபர் நிறுவனம் கடந்த 1884-ல் இதன் பயணம் தொடங்கியது. 138 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம் கடந்து வந்த பாதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமாக உள்ளது டாபர் நிறுவனம். கடந்த 1884-ல் இதன் பயணம் தொடங்கியது. சுமார் 138 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த நிறுவனம் கடந்து வந்த பாதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

19ம் நூற்றாண்டில் வங்காளத்தில் தொடங்கிய Dabur

ஆயுர்வேத பயிற்சியாளர் எஸ்.கே.பர்மன் 'டாபர்' நிறுவனத்தை நிறுவியுள்ளார். அவரது குடும்பம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். காலரா, மலேரியா, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்துள்ளார். அதற்கான சூத்திரங்களை ஆய்வுகளின் அடிப்படையில் அவரே மேற்கொண்டுள்ளார். தயாரித்த மருந்துகளை சைக்கிளில் சென்று விற்பனையும் செய்துள்ளார்.

Dabur story

அப்போது மக்கள் அவரை 'டாபர்' என அழைத்துள்ளனர். அதாவது, 'டாக்டர் மற்றும் பர்மன்' என இரண்டையும் இணைத்து டாபர் என மக்கள் அழைத்துள்ளனர். அப்படியே சிறிதாக ஆரம்பித்த அந்த பயணம் பெரிய அளவிலான உற்பத்தியை நோக்கி நகர்ந்துள்ளது.

அதனால் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட தனது தயாரிப்பை டாபர் என்ற பெயரில் 1884ல் நிறுவனமாக தொடங்கியுள்ளார். 1896ல் டாபர் நிறுவனத்தின் முதல் உற்பத்திக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 

5வது தலைமுறை கையில் டாபர்

1907ல் எஸ்.கே.பர்மன் மறைவுக்குப் பின், அவரது மகன் சி.எல்.பர்மன், பின்னர் அவரது மகன்கள் பி.சி.பர்மன், ஆர்.சி.பர்மன், அதையடுத்து அப்படியே டாபர் நிறுவனத்தை அடுத்தடுத்த வாரிசுகள் தொடர்ந்து நிர்வகித்து வந்துள்ளனர். தற்போது 5வது தலைமுறை வாரிசாக இருக்கும் அதித்ய பர்மன் ‘டாபர்’ நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

1972ல் டாபர் நிறுவனம் தனது இயக்கத்தை தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள ஃபரிதாபாத் பகுதிக்கு மாற்றிக் கொண்டுள்ளது. இந்த பணியை மேற்கொண்டுள்ளார் ஜி.சி.பர்மன். 

அப்படியே தனது வணிகத்தை டாபர் நிறுவனம் அங்கிருந்து பன்மடங்கு பெருகி உள்ளது. 1993ல் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளைத் தயாரித்துள்ளது. அதற்காக இமாச்சல பிரதேச பகுதியில் காணப்படும் செடியை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து 1994ல் பங்கு வெளியீட்டில் இறங்கியுள்ளது. அங்கு பங்குகளுக்கு அமோக வரவேற்பானது முதலீட்டாளர் மத்தியில் கிடைத்ததாக தகவல். இப்போது எஸ்.கே.பர்மன் குடும்பத்தினர் இந்த தொழிலை கவனித்து வருகின்றனர். 

8 போர்ட்ஃபோலியோ

ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பு மூலம் சந்தையில் அடியெடுத்து வைத்த டாபரின் பயணம் காலத்தின் தேவைக்கு ஏற்ப தொழிலையும் தகவமைத்துக் கொண்டுள்ளது. 

டாபோஉய

ஹெல்த் கேர் பிரிவில் டாபர் சாவ்னிபிரஷ், டாபர் தேன், டாபர் புதின்ஹரா, டாபர் லால் தைலம், டாபர் ஹானிடாஸ் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெர்சனல் கேர் பொருட்களில் டாபர் ஆம்லா, ஹேர் ஆயில் மற்றும் டாபர் ரெட் டூத் பேஸ்ட் உள்ளன.

தலைமுடி, ஓரல் ஹெல்த், தோல், ஹோம் கர், உணவு வகைகள் போன்றவை இதில் அடங்கியுள்ளன. 

டபவுர்

இப்போது இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் சுமார் 120 நாடுகளில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனமாக உள்ளது டாபர்.

கடந்த 2021ல் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் எட்டியது குறிப்பிடத்தக்கது.


Edited by Induja Raghunathan