Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

உள்ளாடைகள் பிராண்டை அறிமுகம் செய்தார் சன்னி லியோன்!

நடிகை மற்றும் தொழில்முனைவரான சன்னி லியோன் உலகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான பெண்களுக்காகவும் ’Infamous by Starstruck’ என்கிற தனது உள்ளாடைகள் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உள்ளாடைகள் பிராண்டை அறிமுகம் செய்தார் சன்னி லியோன்!

Friday August 09, 2019 , 2 min Read

நடிகை சன்னி லியோன் அழகு மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவில் செயல்பட்ட பிறகு ’Infamous by Starstruck’ என்கிற தனது உள்ளாடைகள் பிராண்டை அறிமுகப் படுத்தியுள்ளார். இந்த பிராண்டுடன் 262 மில்லியன் டாலர் உலகளாவிய உரிமம் மற்றும் விற்பனைத் துறையில் கால் பதித்துள்ளார்.


மும்பையில் நடைபெற்ற இந்திய லைசென்சிங் எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட இவரது பிராண்ட் ’சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த பிராண்ட்’ என பாராட்டப்பட்டது. Marie Claire வழங்கிய லேபில்ஸ் விருது விழாவில் இதற்கான விருது வழங்கப்பட்டது. பிராண்ட் அறிமுக விழாவில் சன்னி லியோன் கூறும்போது,

“Infamous உலகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான பெண்களுக்குமான பிராண்ட் ஆகும்,” என்றார்.
Sunny
”Infamous by Starstruck பிராண்டை ILE 2019-ல் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் பிராண்டை சில்லறை வர்த்தக பிரிவில் ஊக்குவித்து, சரியான லைசன்சிங் பார்டனரைக் கண்டறிந்து, உலகளவில் பிராண்டை முன்னெடுத்துச்செல்லத் தேவையான தளத்தை ILE எங்களுக்கு அமைத்துக்கொடுத்தது,” என்றார்.

சன்னி லியோனின் பெற்றோர் இந்தியர்கள். இவர் கனடாவில் பிறந்தவர். பாலிவுட்டிலும் இந்தியத் தொலைக்காட்சி தொடரிலும் நடிக்கத் தொடங்கினார். பல்வேறு ஷேட்களில் லிப்ஸ்டிக், லிப்-லைன், லிப் க்ளாஸ் போன்ற பொருட்களை Star Struck by Sunny என்கிற சொந்த காஸ்மெடிக்ஸ் பிராண்ட் மூலம் அறிமுகப்படுத்தினார்.


இதற்கு முன்பு ஹெர்ஸ்டோரி உடனான நேர்காணலில் சன்னி லியோன் கூறும்போது,

“எனக்கு காஸ்மெடிக்ஸ் பிடிக்கும் என்பதால் நான் இந்தப் பிரிவில் செயல்படத் தொடங்கினேன். எங்களது பிராண்ட் ஏற்கெனவே சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நான் முக்கியமானதாகக் கருதும் ஒன்றையே உருவாக்க விரும்பினேன்.

நான் எப்போதும் கேமரா முன்பு மேக்-அப்புடன் காட்சியளிப்பதால் இத்தகைய தயாரிப்புகள் என்னை அழகாகக் காட்டுகிறது. அதையே மக்களுக்கும் வழங்க விரும்பினேன், என்றார்.


அதிகமான நபர்கள் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது நாம் விரும்பாத திசையில் நடவடிக்கைகள் பயணிக்கக்கூடும் என்பதை நானும் டேனியலும் எங்களது அனுபவத்தில் உணர்ந்திருந்தோம். எனவே முதலீட்டாளர்களை இணைத்துக் கொள்ளாமல் செயல்பாடுகளை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாங்களே சொந்தமாக இந்த முயற்சியில் ஈடுபடத் தீர்மானித்தோம்.

“தினசரி பிராண்ட் வளர்ச்சியடைந்து வருவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா