Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சென்னை மாம்பலத்தில் 10வது ஸ்டோரை திறந்துள்ளது SunnyBee!

மேற்கு மாம்பலத்தில் உள்ள லேக் வியூ சாலையில் 2,000 சதுர அடியில் திறக்கப்பட்டுள்ள புதிய ஸ்டோரில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் என ஃப்ரெஷ்ஷான பொருட்கள் விற்பனை செய்து வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்க உள்ளது SunnyBee.

சென்னை மாம்பலத்தில் 10வது ஸ்டோரை திறந்துள்ளது SunnyBee!

Thursday May 05, 2022 , 1 min Read

Sunny Bee பிராண்ட் ஃப்ரெஷ்ஷான விளைச்சல்களையும் உயர்தரமான உணவுப் பொருட்களையும் வழங்குகிறது. இந்நிறுவனம் சென்னை, மேற்கு மாம்பலத்தில் அதன் புதிய ஸ்டோரைத் திறந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் 10-வது ஸ்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டு நிறுவப்பட்ட Sunny Bee மளிகை, காய்கறிகள், பால் பொருட்கள் என பல்வேறு பிரிவுகளில் 5,000-க்கும் மேற்பட்ட எஸ்கேயூ-க்களுடன் சேவையளித்து வருகிறது.

1

மேற்கு மாம்பலத்தில் உள்ள லேக் வியூ சாலையில் 2,000 சதுர அடியில் இந்த புதிய ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் என ஃப்ரெஷ்ஷான பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

”ஃப்ரெஷ்ஷான விளைச்சல்களை வழங்கும் எங்கள் 10வது ஸ்டோரை இந்த மாம்பழ சீசனில் மாம்பலம் பகுதியில் திறப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் எங்கள் புதிய ஸ்டோர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. தரமான ஃபார்ம் ஃப்ரெஷ் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கவேண்டும்; நம்பகமான பிராண்ட் இதை முறையாக டெலிவர் செய்யவேண்டும்; இவையே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இதை பூர்த்தி செய்வதில் நாங்கள் முழு கவனம் செலுத்துகிறோம். இதுவே எங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு முன்னுரிமை அளிக்கிறோம். அத்துடன் விவசாயிகளின் நலனிலும் அக்கறை காட்டுகிறோம்,” என்கிறார் ரீடெயில் ஃப்ரான்சைஸ் சிஓஓ சவுமிக் பேனர்ஜி.
sunnybee

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் அதேசமயம் விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறது SunnyBee. இதற்காக இந்நிறுவனம் Self-Checkout Service, SunnyBee Mobile App போன்ற தனித்துவமான தொழில்நுட்பத் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Self-Checkout சேவை பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. மொபைல் செயலி ஸ்டோர் இருக்கும் இடத்திலிருந்து 1-2 கி.மீட்டர் தொலைவு வரையிலிருக்கும் வாடிக்கையாளர்கள் வெறும் 25 நிமிடங்களில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள உதவுகிறது.