Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'கனவை பின் தொடருங்கள்; லாபத்தை பெருக்குங்கள்' - TamilNadu Story விழாவில் இளம் நிறுவனர்களுக்கு சுரேஷ் கல்பாத்தி அறிவுரை!

வெராண்டா லெர்னிங் சி.இ.ஓ, ஏஜிஎஸ் சினிமாஸ் இயக்குனர், கல்பாத்தி இன்வெஸ்ட்மண்ட்ஸ் தலைவர், சி.இ.ஓ என பல பொறுப்புகளை வகிக்கும் சுரேஷ் கல்பாத்தி, கல்வி, முதலீடு என பல விஷயங்கள் குறித்து, யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ, ஷ்ரத்தா சர்மாவுடனான உரையாடலில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

'கனவை பின் தொடருங்கள்; லாபத்தை பெருக்குங்கள்' - TamilNadu Story விழாவில் இளம் நிறுவனர்களுக்கு சுரேஷ் கல்பாத்தி அறிவுரை!

Monday July 22, 2024 , 3 min Read

வெற்றிகரமான வர்த்தகத்திற்கான முக்கிய அம்சம் லாபம் ஈட்டும் தன்மை ஆகும், ஏனெனில், உலகம் எப்படி மாறினாலும் லாபம் ஈட்டும் வர்த்தகம் தனது மதிப்பையும், பொருத்தத்தையும் தக்க வைத்துக்கொள்ளும், என தொடர் தொழில்முனைவோரான சுரேஷ் கல்பாத்தி இளம் தொழில்முனைவோர்களுக்கு அறிவுரையாகக் கூறினார்.

“நம்மில் யார் வர்த்தகம் துவங்கினாலும்… உங்கள் வர்த்தகம் லாபகரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உலகம் எப்படி மாறினாலும், எந்த திசையில் சென்றாலும், நிது கிடைப்பது எளிதாக இருந்தாலும், சிக்கலாக இருந்தாலும் லாபகரமான வர்த்தகத்திற்கு ஒரு மதிப்பு இருக்கும்,” என்றார்.
YS

யுவர்ஸ்டோரியின், 'தமிழ்நாடு ஸ்டோரி 2024' நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கல்பாத்தி இவ்வாறு கூறினார். வெராண்டா லெர்னிங் சி.இ.ஓ, ஏஜிஎஸ் சினிமாஸ் இயக்குனர், கல்பாத்தி இன்வெஸ்ட்மண்ட்ஸ் தலைவர், சி.இ.ஓ என பல பொறுப்புகளை வகிக்கும் சுரேஷ் கல்பாத்தி, கல்வி, முதலீடு என பல விஷயங்கள் குறித்து, யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ, ஷ்ரத்தா சர்மாவுடனான உரையாடலில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

முதலீடு திரட்டியவர் மற்றும் முதலீடு செய்பவர் என்ற முறையில், கால அளவு குறைவு என்பதால், இளம் தொழில்முனைவோர்கள் முதலீட்டாளர்கள், கனவை வாழ்வதை விட தங்கள் கனவு மற்றும் ஈடுபாட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்று கல்பாத்தி கூறினார்.

“உங்கள் பங்கில் நுழைவார்கள், பின்னர் வெளியேறுவார்கள், பெரிய வாய்ப்பு இருந்தால் முன்னதாக கூட வெளியேறுவார்கள். அப்படி செய்யும் போது தங்கள் கனவை நிறைவேற்றிக்கொண்டிருப்பார்கள், நீங்கள் தான் கொடுங்கனவை அனுபவிக்க வேண்டியிருக்கும்? என்று அவர் விளக்கினார்.

உங்கள் கனவை துரத்திச்செல்வதில் இருந்து வெளியே செல்லாதீர்கள். எதுவும் சரியாக நிகழாத போது உங்கள் ஈடுபாடும், கனவும் தான் கைகொடுக்கும், என்றும் கூறினார்.

ஸ்டார்ட் அப் சூழலை ஆதரிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், கல்பாத்தி இன்வெஸ்ட்மண்ட்ஸ் மூலம் விதை நிதிகளை அளித்து வருவதாகவும் கூறினார்.

“மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியை கண்டறிந்துள்ள வர்த்தகத்தையே எப்போதும் எதிர்பார்க்கிறேன். இத்தகைய பிரச்சனையை கண்டறிவதே புதிய வர்த்தகத்தின் 50 சதவீதமாக அமைகிறது,” என்றார்.

மழலையர் கல்வி துவங்கி பள்ளி, கல்லூரி, திறன் வளர்ச்சி, தேர்வு பயிற்சி, மாணவர் விடுதி, கல்வி கடன் வரை எல்லாவற்றுக்கும் சேவை அளிக்கும் வெராண்டா லேர்னிங் மூலம் கல்வி அவரது முக்கிய கவனமாக இருக்கிறது.

“வெராண்டா மேடை கீழ், இணைந்து செயல்படுவதற்கான, கையகப்படுத்துவதற்கான கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நாடுகிறோம். இதுவரை 19 நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளோம். மொத்த சூழலையும் உருவாக்கி வருகிறோம். மாறுபட்ட முறையில் செயல்படும் நிறுவனங்களை நாடுகிறோம்,” என்று கல்பாத்தி கூறினார்.

தொழில்நுட்பத்தை முழுவதும் பயன்படுத்திக்கொள்ளும் கல்வி நிறுவனமாக அல்லாமல், கல்வி நுட்ப நிறுவனமாக தன்னை வெராண்டா முன்னிறுத்திக்கொள்வது முக்கிய வேறுபாடு என்றார்.

TN Story - Suresh Kalpathi

நிறுவனத்தை வளர்த்தெடுதத்து பற்றி பேசியவர், பல்வேறு கையகப்படுத்தல் மூலமான வளர்ச்சியை மீறி, ஒவ்வொரு ஒப்பந்தமும் கல்வித்தரம் மற்றும் லாபம் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டிருப்பதாகக் கூறினார். துவக்கத்தில் கல்வித்துறைக்கு திரும்புவது பற்றி யோசித்துக்கொண்டிருந்த போது, 50 முதல் 100 மில்லியன் டாலர் ஆதரவு அளிக்க பலர் முன்வந்தாலும், ஆன்லைன் மாதிரியை வலியுறுத்தியதாகவும், அது அவர்கள் கனவாக இருந்தது என்னுடையது அல்ல, என்கிறார்.

“இரண்டும் கலந்த மாதிரியை உருவாக்க விரும்பினேன். ஏனெனில் மக்கள் அதை தான் விரும்பினர். கோவிட் உண்டாக்கிய மாற்றம் குறுகிய காலத்திற்கானது. இது உள்ளார்ந்த மாற்றம் அல்ல,” என்கிறார்.

கல்வி நுட்ப நெருக்கடி

பெருந்தொற்றுக்கு பிறகான சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் கல்வித் துறையில் நிறுவனம் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வளர்ந்து வருகிறது. 2024 நிதியாண்டில் தனது நஷ்டத்தை குறைத்து வருவாயை இரு மடங்காக்கியுள்ளது.

இதனிடையே, கல்வி நுட்ப நிறுவனங்களின் மதிப்பீடு கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய ஸ்டார்ட் அப்பின் பிரகாசமான உதாரணமாக இருந்த பைஜூஸ் மதிப்பீடு 22 பில்லியன் டாலரில் இருந்து 99 சதவீதம் சரிந்துள்ளது.

“மதிப்பீடு என்பது பளபளப்பு தான். இன்று இருக்கும் நாளை இல்லாமல் போகும். அது உங்களை உயரே கொண்டு சென்றாலும் கீழே போட்டுவிடும். கைவிடப்பட்ட ஒன்றாகி விடுவீர்கள்,” என்று அவர் கூறினார்.

கல்வியில் கவனம் செலுத்தினாலும், அவர் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொன்றிலும் ஏற்ற இறக்கம் இருக்கிறது.

“நீங்கள் ஒன்றை செய்வதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்களா என்பது முக்கியம். வெராண்டாவில் 300 பேர் உள்ளனர். அவர்கள் நம்பிக்கையை, பொறுப்பை சுமர்க்கிறோம். நிறுவனத்தை வளர்த்து, இதை முன்னோக்கி எடுத்துச்செல்ல விரும்புகின்றனர். இது என்னுடைய கதை அல்ல, எங்கள் அனைவரின் கதை. இதை தினசரி செய்யும் போது ஒரு திருப்தி அளிக்கிறது,” என்கிறார்.

ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா ~ தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan