சர்வைவர் தொடர்: லாக்டவுன் பாதிப்பில் இருந்து மீண்ட 12 வயது சிறுமி!
மன ரீதியான சிக்கலை எதிரிகொண்ட சிறுமி!
இந்த வார சர்வைவர் தொடரில் 12 வயது சிறுமி கொரோனா லாக்டவுன் காலத்தில் சந்தித்த துன்பங்களில் இருந்து எவ்வாறு வெளியே வந்தார் என்பது குறித்து பேசுகிறார்.
"நான் விபுலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12 வயதாகிறது. என் தந்தை வீட்டு வேலை செய்து வருகிறார். அவரது சொற்ப வருமானத்தை கொண்டு எங்கள் வீட்டுச் செலவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. எனது 14 வயது சகோதரன் ஏட்ரியல் செப்டல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு சிகிச்சை செய்வதற்கே என் தந்தை சம்பாரிக்கும் பணம் செலவாகிவிடும். எல்லா சவால்களும் இருந்தபோதிலும், லாக்டவுனின் போது எனது குடும்பம் இன்னும் மோசமான நிலையை எட்டும் என நான் நினைக்கவில்லை.
கொரோனா லாக்டவுனால் ஒரே இரவில் தனது வேலையை இழந்தார். குடும்பத்தை பெரும் நிதி நெருக்கடிக்குள்ளாகியது. எதிர்காலம் தொடர்பான பயம் உண்டானது. வீட்டில் இருந்த பதற்றத்தால் உண்டான தனிமை என்னை பாதிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு அனுபவமும் என்னை உதவியற்ற நிலை மற்றும் விரக்தியின் உணர்விற்குள் தள்ளியது. என் மன ஆரோக்கியத்தையும் பாதித்தது. அதிர்ஷ்டவசமாக, சலாம் பாம்பே என்ற அறக்கட்டளையின் உதவியாளர் ஒருவரின் உதவி கிடைத்தது.
அவரின் அழைப்பு, குடும்பத்தில் இருந்து சிறிது அழுத்தத்தைக் குறைக்க முடிந்தது, மேலும் எனக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. ‘ஹேப்பி கால்’ (Happy Call) என்பது அறக்கட்டளையின் பல்வேறு வகையான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். குழந்தைகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இந்த முயற்சியின் காரணமாக முழுமையாக தங்களை மகிழ்வாக உணர்ந்தனர்.
இது ஒரு முறைசாரா உரையாடலைக் கொண்டிருந்தது. மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படும்போது அவர்களின் மன உறுதியை உயர்த்த உதவியது. அங்குச் சென்ற பிறகு எனது குடும்பத்தின் சவால்களைப் பற்றி அனைத்தையும் மனம் திறந்து பேசினேன். நாங்கள் கடந்து வந்த அனைத்தையும் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக, என் பெற்றோரிடம் அமைப்பின் நிர்வாகிகள் பேசினர். அதுமட்டுமில்லாமல், சலாம் பாம்பே அறக்கட்டளையின் ஆதரவுடன் ரேஷன் ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டது. எங்கள் மருத்துவச் செலவுகளை எனது குடும்பத்தினர் இன்னும் நிர்வகிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அந்த அமைப்பு உதவிகரமாக இருந்தது," என்று மனம் திறந்துள்ளார்.
தமிழில்: மலையரசு