Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தொழில் முனைவோர்களாக உயர்ந்த பட்டியலின- பழங்குடியின இளைஞர்கள் - தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் தொழில் திட்ட சாதனை!

தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அளித்த ஊக்கம் காரணமாக பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளதோடு அவர்கள் இந்தியாவிலேயே தொழில்முனைவோர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொழில் முனைவோர்களாக உயர்ந்த பட்டியலின- பழங்குடியின இளைஞர்கள் - தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் தொழில் திட்ட சாதனை!

Monday June 10, 2024 , 3 min Read

தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அளித்த ஊக்கம் காரணமாக பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளதோடு அவர்கள் இந்தியாவிலேயே தொழில்முனைவோர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 2021-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன்றைய நிலவரப்படி, இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-ஐ எட்டியுள்ளது. மகளிர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது அது மூன்று மடங்குமேல் அதிகரித்து 3,163 ஆக உயர்துள்ளது.

TN Start up

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை எட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு பட்டியலின மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்து ரூ.80 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 38 நிறுவனங்களுக்கு ரூ.55.20 கோடி பங்கு முதலீடுகள் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய புதுயுகத் தொழில் முனைவு வளர்ச்சியினை அடையும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் பட்டியலினத்தவர் பழங்குடியினர் ஸ்டார்ட்-அப் நிதித்திட்டமானது 2022- 23 ஆம் நிதி ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

Start up

மேலும், இப்பிரிவினைச் சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் அரசு முதலீடு செய்து வருகின்றது.

இத்திட்டத்தின் வாயிலாக 38 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.55.2 கோடி பங்கு முதலீடு உறுதி செய்யயப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது சேலம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்தோர் இதன் வாயிலாக பயன்பெற்றுள்ளனர்.

இயந்திரவியல், வேளாண் தொழில்நுட்பம், ஊடகத்துறை, செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்தொழில் நுட்பம், பசுமை எரிவாயு தயாரித்தல், இணைய வழி வணிகம், உணவு மதிப்புகூட்டுதல், விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் புத்தாக்க வணிக மாதிரிகளை கொண்டு இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்குகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற்ற ’டோ மேன்’ (Tow Man) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமானது முதலீட்டிற்கு பின்பு தனது செயல்பாடுகளால் அமெரிக்கத் தமிழ் நிதியத்திடம் இருந்து ரூ.1 கோடி முதலீடு பெற்றுள்ளது.

மேலும், ’ஆர்பிட் எய்ட்’ (ORBID AID) என்ற நிறுவனமானது உலகில் விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் 1,544 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஒப்பிட்டு நடத்திய ஆய்வில், சிறந்த 20 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

orbit aid

'குகன் இண்டஸ்டிரியல் அண்ட் மெனுபேக்சரிங்' (Gugan Industrial and Manufacturing Industries) நிறுவனமானது கடினமான உலோகத்தையும் எளிதாக வெட்டும் தனித்துவமான தொழில் நுட்பத்தினை இந்தியாவிலேயே முதல் முதலில் தயாரித்த நிறுவனமாக உள்ளது.

'எகோஸாப்ட் சொலூசன்ஸ்' என்னும் நிதித் தொழில்நுட்ப நிறுவனம் சமீபத்தில் பில்லியன் லோன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களின் நிதித்தேவையினை உடனடியாக நிறைவு செய்யும் வகையில் தொழில்நுட்ப சேவையினை வழங்கி வருகிறது.

100 சதவீதம் பழங்குடிகளால் நிர்வகிப்பட்டு இத்திட்டத்தில் முதலீடு பெற்ற 'ட்ரைபல் கிரீன்' எரிபொருள் (Tribal Green Fuel) நிறுவனமானது லாண்டனா காமரா என்னும் களைச்செடியில் இருந்து எரிபொருள் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் வாயிலாக சுற்றியுள்ள வனக்கிராமங்களில் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

Start up

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் 'லெமூரியன் வெஞ்சர்ஸ்' (Lemurian Ventures) நிறுவனம் உலர்மீன் (கருவாடு) தொழிலில் புதுமையான பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் வாசனை வெளிவராத வகையில் விற்பனை செய்து வருகிறது.

கோத்தகிரி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக அவர்களது பாரம்பரிய தயாரிப்புகளை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் 'ஐ கேம் டெக்னாலஜிஸ்' (Icam Technologies) நிறுவனமானது அரசின் முதலீட்டின் வாயிலாக இந்த தளத்தினை சிறப்பாக வடிவமைத்து வருகிறது.

சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் காலண்டரில் குறும்பர் பழங்குடி ஓவியத்தினை வரையும் சந்தை வாய்ப்பினை பெற்று, வணிகத்தில் சிறப்பாக இயங்கிவருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற்ற நிறுவனங்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட இத்திட்டங்கள் முழு வேகத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணிப் புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் உலகப் ஸ்டார்ட்-அப் மாநாடு (Global Startup Summit) வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.