Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

‘தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி’ செப் 5 ரூ.830 கோடிக்கு ஐபிஓ வெளியீடு: பங்கு விலை என்ன?

பொது பங்கு வெளியீடு செயல்முறை முடிந்ததும், புதிய கிளைகள் துவக்குவது தொடர்பாக மூன்று ஆண்டுக்கு முன் விதிக்கப்பட்ட தடை ரிசர்வ் வங்கியால் நீக்கப்படும் என தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி’ செப் 5 ரூ.830 கோடிக்கு ஐபிஓ வெளியீடு: பங்கு விலை என்ன?

Thursday September 01, 2022 , 2 min Read

ஐபிஒ வெளியீடு செயல்முறை முடிந்ததும், புதிய கிளைகள் துவக்குவது தொடர்பாக மூன்று ஆண்டுக்கு முன் விதிக்கப்பட்ட தடை ரிசர்வ் வங்கியால் நீக்கப்படும் என தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ.830 கோடிக்கு பொது பங்குகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பங்கு வெளியீடு அமைகிறது.

Tech startup IPOs

IPO வெளியிடும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஐபிஒ எனப்படும் பொது பங்குகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

வங்கி தனது பங்களுக்கான விலையை ரூ.500 முதல் 525 வரை நிர்ணயித்துள்ளது. 1962ல் தற்போதுள்ள பெயருக்கு மாறிய வங்கி, 15.8 மில்லியன் சமபங்குகளை ரூ.10 முக மதிப்பில் வெளியிட உள்ளது.

கிளைகள் திறக்கும் திட்டம் தொடர்பாக வங்கி நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், வங்கி நிர்வாகத்தில் இது தொடர்பாக நடைபெறும் விவாதத்தை அறிந்த நபர் ஒருவர், ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்த பிறகு,

அடுத்த 18 முதல் 24 மாதங்களில் 100 முதல் 150 புதிய கிளைகள் வரை திறக்கப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக மின்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 509 கிளைகளில் 72 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. பொதுப் பங்கு வெளியீட்டிற்கு பிறகு தனது இருப்பை பரவலாக்குவதற்காக வங்கி, 75 சதவீத புதிய கிளைகளை பிற மாநிலங்களில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு வங்கியின் பங்குதாரர்களால் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தை ரூ.500 கோடியாக உயர்த்த திட்டமிட தீர்மானித்தனர். எனினும், வங்கி தனது மூலதனத்தை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு பாதி கூட உயர்த்தவில்லை என்று ரிசர்வ் வங்கி 2019ல் குறிப்பிட்டு, புதிய கிளைகள் திறப்பதற்கான தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. இவற்றில் சில 2021ல் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில், ஐபிஒ வெளியிட்டுக்குப் பின் வங்கி புதிய கிளைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கிறது. புதிய கிளைகள் திறக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிட்டல் வங்கி மையங்கள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. டிஜிட்டல் வங்கிச்சேவைகளை அளிக்கும் வகையில், குறிப்பிட்ட உள்கட்டமைப்பு கொண்டவையாக டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைகின்றன. நிதிச்சேவைகளை அனைவருக்கும் சாத்தியமாக்குவதை இவை நோக்கமாக கொண்டுள்ளன.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, பொது பங்குகளை வெளியிடுவதாக வங்கியின் முதன்மை செயல் அதிகாரி கே.வி.ராமமூர்த்தி கூறியிருந்தார். கிளை திறப்பு தொடர்பான கட்டுப்பாடு வளர்ச்சியை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், பங்கு வெளியீட்டிற்கு இதுவும் ஒரு காரணம், இந்த கட்டுப்பாடு முடக்கம் இல்லை என்றால் வங்கி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

வங்கியின் பங்கு அமைப்பு பிரிந்திருப்பதாகவும், எந்த ஒரு பங்குதாரரும் 5 சதவீதத்திற்கு மேலான பங்குகளை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். நாடார் சமூக நலனுக்காக துவக்கப்பட்ட இந்த வங்கியின் பங்குகள் பெரும்பாலும் தனி பங்குதாரர்களிடம் உள்ளது. இவர்கள் நாடு முழுவதும் உள்ளனர்.

Tamilnadu Mercantile bank

கடந்த காலங்களில் இந்த வங்கியை கையகப்படுத்தும் முயற்சிகள் சில மேற்கொள்ளப்பட்ட போது, ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தன் காரணமாக, வங்கி எந்த ஒரு பெரிய பங்குதாரரையும் கொண்டிருக்கவில்லை.

வங்கி வெளியிட்டுள்ள தகவல்படி, அதன் 37.73 சதவீத செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் அல்லது 53.49 சதவீத பங்குகள் ஏதேனும் ஒரு வழக்கு விவகாரத்திற்கு உள்ளாகியுள்ளது. இவை தொடர்பாகவும் கட்டுப்பாடு அமைப்புகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

எனினும், சர்ச்சைக்குறிய பங்குகளில் 20 சதவீதம் மட்டுமே பங்குதாரர் பிரச்சனை தொடர்பானவை மற்றவை தனிநபர் பிரச்சனைகள் என மூர்த்தி கூறியுள்ளார்.

வங்கி தனது பங்களுக்கான விலையை ரூ.500 முதல் 525 வரை நிர்ணயித்துள்ளது. 1962 ல் தற்போதுள்ள பெயருக்கு மாறிய வங்கி, 15.8 மில்லியன் சமபங்குகளை ரூ.10 முக மதிப்பில் வெளியிட உள்ளது.

தொகுப்பு: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan