துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் மட்டுமல்ல, செக்யூரிட்டி கார்டின் பேரன் 8 பதக்கங்கள் வென்று அசத்தல்!
தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடிகர் அஜித்தும் கலக்கல்!
மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செக்யூரிட்டி கார்டாக பணிபுரியும் மனோகரன் என்பவரின் பேரன் தர்ஷன், மார்ச் 2 - 7 ஆம் தேதிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் உள்ளிட்ட 8 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார்.
அவர் சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டு கூட்டமைப்பால் (ISSF) அங்கீகரிக்கப்பட்ட ஜூனியர் ஆடவர் குழு, 10மீ ஏர் ரைபில் (ISSF) மற்றும் 50மீ ஸ்மால் போர் ஃப்ரீ ரைபில் ப்ரோன் ஜூனியர் ஆடவர் குழு தங்கப்பதக்கமும், 10மீ ஏர் ரைபில் (ISSF) இளம் ஆடவர், 10 மீ ஏர் ரைபிள் (ISSF) - ஆடவர், 50 மீ ரைபில் ப்ரோன் (தேசிய ரைபில் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சாம்பியன் பட்டம் இளம் ஆடவர் போட்டியில், தர்ஷன் வெள்ளிப் பதக்கமும் மற்றும் 50மீ ரைபில் ப்ரோன் (ISSF) போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-7ம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் தலைமையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றது.
சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் அதிகமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்ற நிலையில், சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.
இதேபோட்டியில் தான் நடிகர் அஜித் கலந்துகொண்டு 6 தங்கப் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித், 6 பதக்கங்களை வென்றார்.
இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னை ரைஃபிள் கிளப்புக்குச் சென்று நடிகர் அஜித் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் தான் தற்போது பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.