யுவர்ஸ்டோரியின் 'Tamilnadu Disruptors 2024' விருதுகளை வென்ற ஸ்டார்ட்அப்கள் யார் யார்?
தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள், ஸ்டார்ட் அப்'களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக யுவர் ஸ்டோரி 'தமிழ்நாடு ஸ்டோரி' நிகழ்ச்சியை நடத்தியது. சென்னையில் 3வது ஆண்டாக தமிழ்நாடு ஸ்டோரி 2024 மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக இருந்தது 'Tamilnadu Disruptors Award 2024'. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஸ்டார்ட்-அப்'களை கவுரவித்து விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட் அப்'களின் புகலிடமாக இருக்கும் தமிழ்நாடு நினைத்துப் பார்க்காத அளவிலான வளர்ச்சியை கண்டுள்ளது. திறன், மேம்பட்ட தொழில் கொள்கை திட்டம், ஆரோக்கியமான தொழில்முனைவுச் சூழல் போன்றவற்றால் தமிழ்நாடு சிறந்த தொழில்முனைவர்கள் தரவரிசையில் முன்னணியில் இருக்கின்றனர் இளம் தொழில்முனைவர்கள்.
இதற்கு முன்னோடிகளாக இருப்பவர்களே தொழில்முனைவை பாதுகாக்கும் disruptors என்று யுவர் ஸ்டோரி அடையாளப்படுத்துகிறது. ஒரு தொழிலைத் தொடங்கி அதில் எதிர்கொள்ளும் சவால்களை தைரியமாக எதிர்கொண்டு, தங்களின் இலக்கில் உறுதியாக இருந்து, புதிதாக ஒன்றை முயற்சிப்பவர்களை பாராட்டும் விதத்தில் யுவர் ஸ்டோரி, அவர்களின் புதுமை, திறமை, வளர்ச்சி அடிப்படையில் பல துறைகளிலும் பிரகாசிக்கும் ஸ்டார்ட் அப்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது.
பல்வேறு பிரிவுகளில் Tamilnadu Disruptors Award 2024' பெற்றவர்கள் விவரம்:
சாஸ் (Saas) விருது
1. கோவை.கோ (Kovai.co)
2. ரெஸ்பான்சிவ் ஐஓ (Responsive IO)
ஸ்பேஸ் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத் துறைக்கான விருது
1. அக்னிகுல் (
)2. கருடா ஏரோஸ்பேஸ் (
)ஹெல்த்கேர் துறை விருது
1. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் (
)2. மைண்ட் அண்ட் மாம் (
)கல்வித்துறை விருது
1. வெராண்டா (
Learning)2. குவி (
)ஃபின்டெக் விருது
1. யுபி (Yubi)
2. கிளவுட் பேங்கின் (
)உற்பத்தித்துறை விருது
1. ஃபிரிகேட் (
)2. ஃபேப்ஹெட்ஸ் ஆட்டோமேஷன் (
Automation)நிலைத்தன்மை விருது
1. சோலார் சுரேஷ்
2. பியாஸ் (
)சமூகப் பணி விருது
1. மாற்றம் அறக்கட்டளை (Maatram Foundation)
2. யெல்லோ பேக் ஃபவுண்டேஷன் (
foundation )அக்ரிடெக் விருது
1. அக்ரி சக்தி – (
)2. வே கூல் ஃபுட்ஸ் (
)வாழ்நாள் சாதனையாளர் விருது : கே.பி. ராமசாமி, தலைவர், கே.பி.ஆர் குழுமம்
விருது பெற்ற அனைத்து டிஸ்ரப்டர்களுக்கும் யுவர்ஸ்டோரி சார்பில் வாழ்த்துக்கள்!