‘சென்னைக்கு வருகிறது உங்கள் யுவர்ஸ்டோரி' - ஜூலை மாதம் தமிழ்நாட்டின் ப்ராண்ட் கதைகளைக் கொண்டாடத் தயாராகுங்கள்!
யுவர்ஸ்டோரி சென்னைக்கு மீண்டும் வருகிறது. வரும் ஜூலை மாதம், TamilNadu Story 2024 சென்னையில் நடைபெற உள்ளது. மாநிலத்தின் ஸ்டார்ட்அப்கள், ப்ராண்ட்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த மதிப்புமிக்க நுண்ணறிவுகள், வளங்கள், நெட்வொர்க்கிங், நிதி திரட்டும் தீர்வுகளை இந்த நிகழ்வு வழங்கவுள்ளது.
உங்கள் யுவர்ஸ்டோரி சென்னைக்கு மீண்டும் வருகிறது...!
தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் பொருளாதார அமைப்பின் மீது அனைவரின் பார்வையை திருப்ப, யுவர்ஸ்டோரி வரும் ஜூலை மாதம், ஒரு மாபெரும் நிகழ்வுடன் சென்னைக்கு வருகிறது.
ஆம்! இந்த பிரம்ம்மாண்ட நிகழ்வில் யுவர் ஸ்டோரி தளம், தமிழ்நாட்டின் புத்தாக்க நிறுவனங்களின் வெற்றியைக் கொண்டாடி, அவர்களை அடுத்த பெரியக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல உதவப் போகிறது.
'தமிழ்நாடு ஸ்டோரி 2024' என்ற இந்த ஒரு நாள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவிருக்கும் யுவர்ஸ்டோரியின் மூன்றாவது பதிப்பு ஆகும். தமிழ்நாட்டிலிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்; தொழில்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த மதிப்புமிக்க ஆலோசனைகள், அதற்குரிய நுண்ணறிவுத் திறன்கள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் புதுமையான முறையில் நிதி திரட்டும் தீர்வுகளை இந்த நிகழ்வு வழங்கவுள்ளது.
வரும் ஜூலை மாதம் 19ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்த்தெடுக்கவும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள். புதுமை புகுத்தும் புத்துணர்வூட்டும் தொழில் முனைவோராவதற்கான சிறந்த நடைமேடையை வழங்கும். தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதிலும் வர்த்தகத்திற்கான நிதியைப் பெறுவதிலும் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்த நிகழ்வு கருத்தில் கொண்டு தீர்வுகளை வழங்கவுள்ளது.
TamilNadu Story 2024 என்ற இந்த தொழில்முனைவோருக்கான தீர்வு கருத்தரங்கம் வெறும் விவாதங்கள் உரையாடல்களுக்கானது மட்டுமல்ல, இது ஒரு ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப உச்சி மாநாடு, புதுமையை நோக்கிய எதிர்காலத்திற்குரிய நடவடிக்கை, மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதுமாகும்.
தமிழ்நாட்டின் ஸ்டார்ட் -அப் பயணம்:
தமிழ்நாடு ஸ்டோரி 2024 என்ற இந்த கருத்தரங்கம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்திய தொழில்நுட்ப யுகத்தில் ஆற்றிய பங்களிப்புகளையும் வலுவான உலகளாவிய இருப்பை நிலை நிறுத்தும் தமிழக ஸ்டார்ட்-அப் தொழில்களின் தன்மைகளை புரிந்து கொள்ள உதவும்.
அதுமட்டுமல்லாமல், குடும்ப வணிகங்கள், பெரிய உற்பத்தி நிறுவனங்கள், முதன்மையான சுகாதாரம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாயகமான தமிழ்நாடு, புதிய தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப்களின் எழுச்சியுடன் புதிய தொழில்களின் ஆற்றல்களின் அலைகளைக் கண்டு வருகிறது.
டிசம்பர் 31, 2023 நிலவரப்படி, 7,500க்கும் மேற்பட்ட DPIIT-அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுடன், சாஸ் (SaaS), ஹெல்த்கேர், ட்ரோன், மற்றும் தொடர்பான தொழிற்துறைகளில்- தமிழ்நாடு ஒரு வலுவான அறிவு உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது. இதோடு, ஃபின்டெக், மின்சார வாகனங்கள், நேரடி நுகர்வோர் டி2சி (D2C) வணிகங்களும் தமிழகத்தில் துளிர்ந்து வருகின்றன.
சென்னையைத் தவிர, ஈரோடு, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற பிற நகரங்களிலும் தமிழகம் குறிப்பிடத்தக்க தொழில்முனைவுகளைக் கண்டுள்ளது. மேலும், கடலூர், ஓசூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஸ்டார்ட்அப் ஹப்களை நிறுவுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
2030-ம் ஆண்டுக்குள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பெரிய இடமாக தமிழகம் உலக அளவில் முதல் 20 இடங்களில் ஒன்றாக முன்னேறும். இந்த இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில், மாநிலத்தில் இருந்து ஸ்டார்ட்அப்கள் எதிர்காலத்தில் முன்னேறுவதற்கான அனைத்தும் தயாராக உள்ளன.
தமிழ்நாடு ஸ்டோரி நிகழ்வில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
நாட்டில் ஸ்டார்ட்அப் பொருளாதாரச் சூழலை வளர்ப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாக யுவர்ஸ்டோரி, தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப்களை பொருளாதாரத்தின் வலுவான தூண்களாக மாற்றுவதற்கு ஆர்வத்துடன் உள்ளது.
இந்த நிகழ்வில் சிந்தனையைத் தூண்டும் குழு விவாதங்கள், ஆற்றல் நிரம்பிய தலைமை உரை, மென்பொருள் சேவை, ஹெல்த் கேர், நிதித்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சமீபத்திய புதிய வணிகங்கள் பற்றிய அறிவைப் பெருக்கும் வகுப்புகள் ஆகியவை இடம்பெறும். மேலும், D2C, கல்வித்தொழில் நுட்ப செயலி மற்றும் மின் வாகன வர்த்தகங்களை வடிவமைக்கும் போக்குகள் குறித்தும் ஆழமான சிந்தனைகளை வழங்கும்.
தமிழ்நாடு மற்றும் பிற அண்டை மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்து ஸ்டார்ட்-அப் முதலீடுகள் குறித்து விவாதிக்கும் அரிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது. குடும்பத்திற்குச் சொந்தமான வணிகங்கள் மற்றும் பாரம்பரிய பிராண்டுகளின் முக்கிய தொழில்முனைவோர் மற்றும் மூத்த தலைவர்களின் சங்கமமாகிய இந்த நிகழ்வில் இவர்கள் தங்கள் தொழில் முனைவுப் பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள்.
இவர்களோடு பலதரப்பட்ட தொழில் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், கார்ப்பரேட்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு முக்கிய நிகழ்வாக இது அமையும்.
ஸ்டார்ட்-அப் பொருளாதாரச் சூழலை வடிவமைக்கும் நிகழ்கால ட்ரெண்ட்கள்:
தமிழ்நாடு ஸ்டோரி 2024 கருத்தரங்கம் புதுயுக வளர்ச்சித் தீர்வுகள், வான்வழி மற்றும் ட்ரோன்-தொழில்நுட்பத்தில் ஏற்படும் இடையூறு வர்த்தக முறை முதல் குடும்பத்திற்கு சொந்தமான வணிகங்களை அளவிடுவதில் அடுத்த தலைமுறை தலைவர்களின் பங்கு வரையிலான தலைப்புகளை ஆராயும். ஹெல்த்கேர் ஜாம்பவான்கள் எப்படி புதுமைகளை ஊக்குவிக்கிறார்கள் என்பதையும் ஹெல்த்டெக் ஸ்டார்ட்அப்களை வளர்க்கிறார்கள் என்பதையும் இந்த நிகழ்வில் பார்க்கலாம்.
அதே போல், வளர்ந்து வரும், பலரின் ஆர்வத்தைத் தூண்டும் செயற்கை நுண்ணறிவுத் தொடர்பான ஸ்டார்ட் அப் வாய்ப்புகள், வசதிகள், கல்வித் தொழில்நுட்பத்துறையை எப்படி மீண்டும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவது என்பதை நிபுணர்கள் பேசுவார்கள். நிதி திரட்டுதல் பற்றிய முக்கியமான அமர்வுகள் அனைவருக்குமானது.
ஜூலை, 19 2024 அன்று சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டோரி 2024 இன் நிகவுக்கு வருகை தாருங்கள். தமிழகத்தை உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக மாற்றத் தயாராக உள்ள தமிழ்நாட்டின் மாற்ற உருவாக்குனர்களிடம் உரையாடுங்கள்.
இன்றே உங்கள் நாட்காட்டியில் ஜூலை 19-ம் தேதியை ப்ளாக் செய்ய நினைவில் கொள்ளுங்கள்!
(Note: தமிழ்நாடு ஸ்டோரி-யின் மூன்றாவது பதிப்பின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதலில் ஜூன் 14 அன்று திட்டமிடப்பட்ட இந்த ஒரு நாள் மாநாடு தற்போது ஜூலை 19, 2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.)