அமெரிக்க அமைப்பின் பாதுகாப்பு விருது பெறும் தமிழர்!
கொரோனா காலத்தில் அமெரிக்க அமைப்புகளுக்கு பாதுகாப்பு தகவல்கள சிறந்த முறையில் கிடைக்க உதவியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் இளங்கோவன், அமெரிக்க அமைப்பின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் இளங்கோவன், அமெரிக்காவின் இண்டர்நேஷனல் செக்யூரிட்டி பவுண்டேஷன் அமைப்பின் ஓவர்சீஸ் செக்யூரிட்டி அட்வைசரி கவுன்சில் (OSAC) சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மண்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலக மேலாளராக இருக்கும் தினேஷ் இளங்கோவன், OSAC அமைப்பின் சென்னை பிரிவு செயலாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்நேஷனல் செக்யூரிட்டி பவுண்டேஷனின் ஆண்டு நிகழ்வில் நவம்பர் மாதம் இந்த தகவலை, அமைப்பின் செயல் துணைத்தலைவர் ஜெரோம் பிக்கெட் அறிவித்தார். அண்மையில் நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வில் இந்த விருந்து வழங்கப்பட்டது.
“கோவிட்-19 பொது முடக்கத்தின் போது, (OSAC வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க அமைப்புகளின் பாதுகாப்பிற்காக அரசு மற்றும் தனியார் கூட்டை அதிகம் சார்ந்திருந்தது. அமெரிக்க நிறுவனங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பு தகவல்களை பெறும் வகையில் புதுமையான திட்டங்களை இளங்கோவை வகுத்தளித்தார்,” என சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிராந்திய பாதுகாப்பு அதிகாரி ஜோசர்ப் ஜங் தெரிவித்துள்ளார்.
தினேஷ் இளங்கோவன், (OSAC உறுப்பினர்களின் தகவல் தொடர்பை மேம்படுத்தி சென்னை பிரிவின் செயல்பாட்டையும் மேம்படுத்தியதாக விருதுக்கான தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை பிரிவின் வாட்ஸ் அப் தகவல் தொடர்பு கொள்கையை தினேஷ் சீரமைத்து, அரசு தகவல்கள் மற்றும் கோவிட்-19 எச்சரிக்கைகள் 20 மொழிகளில் கிடைக்க வழி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொது முடக்கக் காலத்தில் தினேஷ் தகவல் கிடைக்கச்செய்வதில் முக்கியப் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISF OSAC ஆண்டு விருதுகள், அமெரிக்க ஊழியர்கள், குழுக்கள் அல்லது தனியார் துறை ஊழியர்களுக்கு, அமெரிக்க அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலான சேவைக்கான அங்கீகராமாக வழங்கப்படுகின்றன. அமெரிக்க அரசு மற்றும் தனியார் துறை இடையிலான கூட்டு முயற்சியாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.