Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மே 7 முதல் டாஸ்மாக் கடைகள்: நிபந்தனைகள் என்ன?

நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர தமிழ்நாட்டில்‌ டாஸ்மாக் கடைகளை மே 7ம் தேதி முதல் காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை‌ திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மே 7 முதல் டாஸ்மாக் கடைகள்: நிபந்தனைகள் என்ன?

Monday May 04, 2020 , 2 min Read

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. பிறகு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு நீட்டிப்பதாக உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது.


இந்நிலையில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் மதுபானக் கடைகள் ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக திறக்கப்பட்டன. தற்போது தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

tasmac shops

கொரோனா வைரஸ்‌ தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில்‌ சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின்‌ ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல்‌ மேலும்‌ இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,‌ மதுபானக்கடைகள்‌, சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும்‌ மதுபானக்கூடங்கள்‌ திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


இந்நிலையில்‌ தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில்‌ மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால்‌ தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மறறும்‌ கர்நாடகா மாநிலங்களில்‌ உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில்‌ உள்ள மக்கள்‌ அதிக அளவில்‌ செல்வதால்‌, மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்‌ நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில்‌ பெரும்‌ சிரமம்‌ ஏற்படுகிறது.


இவற்றை கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாட்டிலும்‌ டாஸ்மாக் கடைகளை வரும்‌ 7.5.2020 முதல்‌ திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும்‌ நோய்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள்‌ திறக்கப்படமாட்டாது.


நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள்‌ மட்டும்‌ கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.


1. மதுபானக்கடைகளில்‌ கூட்டம்‌ கூடுவது தவிர்க்கப்படவேண்டும்‌.


2. ஒரு நபருக்கும்‌ இன்னொரு நபருக்கும்‌ உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்படவேண்டும்‌.


3. மதுபானக்கடைகளில்‌ ஒரே நேரத்தில்‌ ஐந்து நபர்களுக்கு மேல்‌ கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.


4. மதுபானக்கடைகள்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.


5. அனைத்து மதுபானக்கடைகளிலும்‌ தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்படவேண்டும்‌.


6. ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும்‌ தேவைகேற்ப கூடுதல்‌ நபர்களை பணியமர்த்தி கூட்டம்‌ சேருவதை தவிர்க்க வேண்டும்‌. மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில்‌ மதுபானக்‌ கடைகள்‌ இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும்‌, மதுபானக்கூடங்கள்‌ திறப்பதற்கு அனுமதி இல்லை.