டாடா பங்குகள் மூலமாக ரூ.900 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!
ஒரே மாதத்தில் உச்சம்!
இந்தியாவின் 'வாரன் பப்பெட்' என அழைக்கப்படுவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இந்திய சந்தைகளில் முதலீடு செய்து பிரபலமானவர் இந்த ராகேஷ். சந்தைகளில் முதலீடு என்பதை தாண்டி, ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்து வருகிறார்.
இந்தியப் பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் எனக் கூறப்படும் நிலையில் இவர் கடந்த மாதத்தில் ரூ.900 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பெனி போன்ற ஒரு சில நிறுவனங்கள் இந்த மாதம் பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் 13% வரையும், டைடன் கம்பெனி 11.40% வரையும் பங்கு விற்பனையில் அதிகரித்தது.
இந்த இரண்டு நிறுவனங்களிலும் முதலீடுகள் செய்திருந்தார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
இந்த முதலீடுகளால் இந்த மாதம் மட்டும் ரூ.893 கோடி லாபம் எடுத்துள்ளார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை ராகேஷ் 3,77,50,000 பங்குகளை வைத்திருந்தார். இந்த மாதம் டாடாவின் ஆட்டோ பங்குகள் விலை ரூ.287.30 என்றளவில் இருந்த நிலையில், தற்போது டாடா மோட்டார்ஸ் பங்குகளின் மூலமாக மட்டும் ராகேஷ் ரூ.164.9675 கோடி வருவாய் திரட்டியிருக்கிறார்.
அதேநேரம், டைட்டன் நிறுவனத்தில் இதே காலகட்டத்தில் 3,30,10,395 பங்குகளையும், அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா 96,40,575 பங்குகளையும் வைத்திருந்தனர். இதனிடையே, இந்த மாதம் டைட்டனின் பங்கு விற்பனை மூலமாக ரூ.1921.60 முதல் ரூ.2092.50 வரை இருவரும் சேர்ந்து வருவாய் ஈட்டினார்கள்.
ஒரு பங்கின் விலை கிட்டத்தட்ட ரூ.170.90 வரை அதிகரிக்க ராகேஷ் மட்டும் தனியாக ரூ.728.90 கோடி லாபம் பார்த்தார். ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் ரூ.900 கோடி ரூபாய் வரை டாடா நிறுவன பங்குகள் மூலமாக லாபம் பார்த்துள்ளார்.
தகவல் உதவி: zee | தமிழில்: மலையரசு