Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

{Tech30} நாசா, இண்டெல் என பிரபல நிறுவனங்கள் பயன்படுத்தும் பிராடக்டை உருவாக்கிய சிற்றூரைச் சேர்ந்த இளைஞர்!

டெவலப்பர்கள் தங்களது கோடிங்கில் உள்ள பிழைகளை தானியங்கி முறையில் கண்டறிந்து தீர்வுகாண உதவும் DeepSource ஸ்டார்ட் அப் யுவர்ஸ்டோரியின் 2020 டெக்30 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

{Tech30} நாசா, இண்டெல் என பிரபல நிறுவனங்கள் பயன்படுத்தும் பிராடக்டை உருவாக்கிய சிற்றூரைச் சேர்ந்த இளைஞர்!

Tuesday November 24, 2020 , 3 min Read

26 வயது சங்கீத் சௌரவ் பீகாரின் பூர்னியா பகுதியில் வளர்ந்தவர். சிறு வயது முதலே இவருக்கு கம்ப்யூட்டர் மீது அதீத ஆர்வம் இருந்தது. குறிப்பாக கோடிங் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இவர் வீட்டில் கம்ப்யூட்டர் இல்லை. ஐந்தாம் வகுப்பு படித்தபோது உறவினரின் கம்ப்யூட்டரில் தாமாகவே கோடிங் கற்றுக்கொண்டார்.


சிறு வயதில் ஏற்பட்ட இந்த ஈடுபாடு நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக்கொண்டே போனது. என்ஐடி ஜாம்ஷெட்பூரில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தார்.


சங்கீத் முதல் தலைமுறை தொழில்முனைவர். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு ஸ்டார்ட் அப் முயற்சிகளில் ஈடுபட்ட இவர், 2018ம் ஆண்டு இணை நிறுவனர் ஜெய் பிரதீஷ் உடன் இணைந்து DeepSource நிறுவனத்தை பெங்களூருவில் நிறுவினார்.


இவரது முந்தைய ஸ்டார்ட் அப் முயற்சியின்போது இவர் பணியமர்த்தியவர்களில் ஜெய் மட்டுமே பொறியாளர். டெவலப்பர்கள் தங்களது கோடிங்கில் உள்ள பிழைகளை தானியங்கி முறையில் கண்டறிந்து தீர்வுகாண இந்த ஸ்டார்ட் அப் உதவுகிறது. யுவர்ஸ்டோரியின் 2020 டெக்30 பட்டியலில் இந்நிறுவனம் இடம்பெற்றுள்ளது.


நாசா, ஊபர், இண்டெல், ஸ்லாக் போன்ற பிரபல நிறுவனங்களில் உள்ள டெவலப்பர்கள் டீப்சோர்ஸ் நிறுவனத்தின் பிராடக்டைப் பயன்படுத்துகின்றனர். ஸ்டார்ட் அப் ஆக்சலரேட்டர் Y Combinator 2020 விண்டர் பேட்சில் இந்த ஸ்டார்ட் அப் பங்களித்தது.


இந்த ஸ்டார்ட் அப் ஜூன் மாதம் நியூயார்க்கைச் சேர்ந்த 645 வென்சர்ஸ் தலைமையில் சீட் முதலீடாக 2.6 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. Y Combinator, FundersClub, Pioneer Fund, Liquid 2 Ventures மற்றும் பல்வேறு தனிப்பட்ட முதலீட்டாளர்களும் இந்த நிதிச்சுற்றில் பங்கேற்றனர். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு இந்நிறுவனம் 1,40,000 டாலர் ப்ரீ-சீட் நிதி திரட்டியுள்ளது.


சங்கீத், ஜெய் இருவரும் டெவலப்பர்களின் மையமான சான் ஃப்ரான்சிஸ்கோவிற்கு அருகிலேயே செயல்பட விரும்கின்றனர். இதனால் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு மாற்றலாக திட்டமிட்டுள்ளனர்.

2

பிராடக்ட்

டீப்சோர்ஸ் பிராடக்ட் ஆங்கில மொழியில் டிஜிட்டலில் எழுத உதவும் Grammarly டூல் போன்றது. ஆனால் கோடிங் சார்ந்தது. டெவலப்பர்கள் தங்களது கோடிங்கில் உள்ள பிழைகளை தானியங்கி முறையில் கண்டறிந்து தீர்வுகாண டீப்சோர்ஸ் உதவுகிறது. இதுகுறித்து சங்கீத் விவரிக்கும்போது,

“ஒரு பிராஜெக்ட் அல்லது ஒரு குழு எப்படி கோட் எழுதுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் தானியங்கி முறையில் பிழைகளை திருத்தம் செய்வதை சாத்தியப்படுத்தி, எப்படி சிறப்பாக கோட் எழுதலாம் என்று பரிந்துரைக்கவும் நாங்கள் ஸ்டேடிக் அனாலிசிஸ், இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்,” என்றார்.

இந்த ஸ்டார்ட் அப்’பின் முக்கிய பிராடக்ட் Autofix. இது அனைத்து முக்கிய புரோக்ராமிங் லேங்வேஜ்களை சப்போர்ட் செய்கிறது. 2,000-க்கும் மேற்பட்ட தனித்துவமான பிழைகளைக் கண்டறிகிறது.

“ஸ்லாக், இண்டெல், நாசா, SAS உள்ளிட்ட ஆயிரக்கணக்கான டெவலப்பர்களும் குழுக்களும் டீப்சோர்ஸ் பயன்படுத்தி கோட் எழுதுகின்றனர்,” என்றார் சங்கீத்.

இந்த ஸ்டார்ட் அப் அதன் க்ளௌட் வெர்ஷனுக்கு ஒரு பயனருக்கு 30 டாலர் மாத கட்டணம் நிர்ணயித்துள்ளது. நிறுவனங்களுக்கான வெர்ஷனுக்கு அந்தந்த நிறுவனத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. நிறுவனங்களுக்கான வெர்ஷனில் ஆண்டு ஒப்பந்த மதிப்பு 80,000 டாலர் முதல் 1,20,000 டாலர் வரை உள்ளது.

“நாங்கள் இந்தத் துறையில் முழுமையான சேவையை வழங்கும் சிறந்த கோட் அனலைசர். தவறான பாசிடிவ் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவு. எங்கள் பிராடக்ட் மட்டுமே கோட் சார்ந்த தவறுகளுக்குத் தானாகவே தீர்வளிக்கிறது,” என்கிறார் சங்கீத்

தனித்துவம்

டீப்சோர்ஸ் நிறுவனம் அதன் போட்டியாளர்களைப் போலல்லாமல் மாறுபட்ட அணுகுமுறையில் தீர்வை வழங்குகிறது.

“எல்லா நிறுவனங்களும் தீர்வளிப்பதில் ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. பிராடக்டை எப்படி விற்பனை செய்வது என்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும் வகையில் பிராடக்டை எப்படி உருவாக்குவது என்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை,” என்று விவரித்தார்.

நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை இலக்காகக் கொண்டு செயல்படுவதற்கு பதிலாக இறுதி பயனரான டெவலப்பர்களை இலக்காகக் கொண்டுள்ளோம். பயனர் அனுபவத்தில் கவனம் செலுத்துகிறோம். மற்றவர்கள் இவைதான் பிரச்சனை என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இரண்டு க்ளிக் செய்தால் போதும் டீப்சோர்ஸ் தானாகவே பிழைகளுக்கு தீர்வளித்துவிடும்.


கோட் எழுதும் நேரமும் சரிபார்க்கும் நேரமும் தானியங்கல் முறையாக்கப்படுவதால் டீப்சோர்ஸ் ஒரு வாரத்தில் டெவலப்பரின் மூன்று மணி நேரத்தை மிச்சப்படுத்துவதாக சங்கீத் தெரிவிக்கிறார். உலகம் முழுவதும் கோட் எழுதி மென்பொருள் உருவாக்கும் 40 மில்லியன் டெவலப்பர்களுக்கு இந்நிறுவனம் உதவுகிறது.


2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டணம் செலுத்தக்கூடிய திட்டங்களுடன் செயல்படத் தொடங்கியது முதல் ஒவ்வொரு காலாண்டிலும் இந்த ஸ்டார்ட் அப்பின் வருவாய் இரட்டிப்பாகி வருகிறது. சங்கீத் கூறும்போது,

“லாபம் ஈட்டுவதில் நாங்கள் தற்போதைக்கு கவனம் செலுத்தவில்லை. எங்கள் பயனர்கள் எண்ணிக்கை ஆர்கானிக்காக ஒவ்வொரு மாதமும் 25-30 சதவீதம் அதிகரித்து வருகிறது,” என்கிறார் சங்கீத்.

ஆங்கில கட்டுரையாளர்: ராமர்கோ சென்குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா