Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Tech30 - சிறந்த எதிர்காலத்தை கொண்ட 30 இந்திய ஸ்டார்ட் அப்கள் TechSparks விழாவில் வெளியீடு!

யுவர்ஸ்டோரியின் பிரம்மாண்டமான டெக்ஸ்பார்க்ஸ் 2022 நிகழ்வின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான, இந்த ஆண்டின் டெக்30 நிறுவனங்களின் பட்டியல்.

Tech30 - சிறந்த எதிர்காலத்தை கொண்ட 30 இந்திய ஸ்டார்ட் அப்கள் TechSparks விழாவில் வெளியீடு!

Friday November 11, 2022 , 3 min Read

யுவர்ஸ்டோரியின் பிரம்மாண்டமான TechSparks 2022 நிகழ்வின் முக்கியமான பகுதிகளில் ஒன்று இந்த ஆண்டின் டெக்30 நிறுவனங்களின் பட்டியல். வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் இந்தியாவின் 30 ஸ்டார்ட் அப்களின் பட்டியல் இந்நிகழ்வின் முதல் நாளான நவம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

Kazam
techsparks

டெக்30 பட்டியல் 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. வருங்காலத்தில் சிறப்பாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ள ஸ்டார்ட் அப்களை முதலீட்டாளர்கள் மட்டும் அங்கீகரித்தால் போதாது என்று ஷ்ரத்தா ஷர்மா குறிப்பிட்டார்.

“நீங்கள் இங்கிருந்து உயரத்தை எட்டி வளர்ச்சியடைவீர்கள் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்ட ஷ்ரத்தா ஷர்மா, Freshworks, Chargebee, Innovaccer என இதற்கு முன்பு டெக்30 வெற்றிப் பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்கள் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாக உலகளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.
tech30
”ஸ்டார்ட் அப் சூழலானது சவாலான காலகட்டத்தில் இருக்கிறது. இது போட்டியிடவேண்டிய நேரமல்ல, ஒன்றிணைந்து செயல்படவேண்டிய நேரம் என்பதே இதற்கு அர்த்தம். உங்கள் வருங்கால பயணத்தில் உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் எப்போதும் இருப்போம்,” என்று ஷ்ரத்தா குறிப்பிட்டார்.

2022-ம் ஆண்டில் தொழில்முனைவோர் ஏராளமான சவால்களை சந்தித்திருப்பினும் புத்தாக்க சிந்தனைகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஸ்டார்ட் அப் துறை புதுமை படைப்பதில் முக்கிய பங்களிக்கிறது. இதற்கு இந்த ஆண்டின் டெக்30 பட்டியல் சிறந்த உதாரணம். இந்த பட்டியலில் தேர்வாகியிருக்கும் 18 நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 1,580 விண்ணப்பங்களிலிருந்து இந்த டெக்30 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொழில்முனைவு சிந்தனை என்பது வெறும் முதல் நிலை நகரங்களுக்கானது அல்ல. அதைத் தாண்டியும் பலர் தொழில்முனைவில் ஆர்வம் காட்டுவதை இந்த விண்ணப்பங்கள் உணர்த்தியுள்ளன.

கடந்த ஆண்டு முதல் நிலை நகரங்களில் இருந்து 74% பேர் விண்ணப்பிருந்த நிலையில் இந்த ஆண்டு 71 சதவீதமாக குறைந்திருக்கிறது.

அதேபோல், முதலீட்டார்களின் நம்பிக்கை கொண்டிருப்பதும் ஒரு முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது. டெக்30 பட்டியலில் தேர்வான கிட்டத்தட்ட 12 ஸ்டார்ட் அப்களில் Sequoia Capital India, Kunal Shah போன்ற முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். பட்டியலில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட ஆறு நிறுவனங்களில் Accel, Tiger Global ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

techsparks-tech30

2022 டெக்30 ஸ்டார்ட் அப்களின் பட்டியல் இதோ:

Aerobiosys Innovations

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கான மருத்துவ தேவைகளை Aerobiosys Innovations பூர்த்தி செய்கிறது. இந்நிறுவனம் குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதியைப் பெற உதவும் வகையில் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குகின்றன.

Algorithmic Biologics

AlgoBio மூலக்கூறுகள் சார்ந்த தகவல்கள் எல்லோருக்கும் கிடைக்க வழிவகுக்கிறது.

BugBase

BugBase எதிக்கல் ஹேக்கர்களின் உலகளாவிய சந்தைப்பகுதி. ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களுக்கு Bug Bounty புரோக்கிராம்களை வழங்குகிறது.

CARPL

CARPL.ai ஹெல்த்கேர் ஏஐ-க்கான உலகின் முதல் டெஸ்டிங் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் தளம்.

Clairco

வணிகரீதியான கட்டிடங்கள் நானோதொழில்நுட்பம் மூலம் உட்புற காற்று மாசுபாட்டையும் ஆற்றல் பயன்பாட்டையும் குறைக்க Clairco உதவுகிறது.

Convrse

Convrse.ai மெட்டாவெர்ஸ் டெவலர்ப்பகளுக்கான சந்தைப்பகுதி.

Dextroware Devices

Mouseware என்கிற Dextroware Devices தயாரிப்பு இந்தியாவின் முதல் அசிஸ்டிவ் தொழில்நுட்பம். ஸ்மார்ட் சாதனங்கள் எளிமையான தலையசைவுகள் மூலம் கட்டுப்படுத்த உதவுகிறது.

Dharaksha Ecosolutions

Dharaksha Ecosolutions நிலத்தில் அறுவடைக்குப் பிறகு எஞ்சியிருக்கும் கழிவுகளை மக்கும்தன்மை கொண்ட பேக்கேஜிங் பொருட்களாக மாற்றுகிறது.

DTown Robotics

DTown Robotics பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பான பயன்பாடுகளில் ஆளில்லா வான்வழி/தரைவழி தீர்வுகளை வடிவமைத்து உருவாக்குகிறது.

ECOSTP

ECOSTP காப்புரிமை பெற்ற ஜீரோ பவர், ஜீரோ கெமிக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை வழங்குகிறது.

ElectricPe

ElectricPe நிறுவனம் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட சார்ஜ் பாயிண்ட் ஆப்பரேட்டர்களுடன் பார்ட்னர்களாக இணைந்திருந்து இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன சார்ஜிங் தளத்தை உருவாக்கி வருகிறது.

Evre

EVRE தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மின்சார வாகன சார்ஜிங் தீர்வுகளை வடிவமைத்து, உருவாக்குவதுடன் நிலையான சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்குகிறது.

GalaxEye

GalaxEye Space விண்வெளியிலிருந்து சாட்டிலைட் மூலம் ஃப்யூஷன் சார்ந்த இமேஜரி டேட்டாவைக் கொண்டு துல்லியமான புவிசார் பகுப்பாய்வுகள் செய்வதில் புதிய பரிமாணத்தை வழங்குகிறது.

Hyphen SCS

இந்தியாவின் மிகப்பெரிய கிடங்கு மற்றும் ஃபுல்ஃபில்மெண்ட் தளத்தை Hyphen SCS உருவாக்குகிறது.

Indicold

Indicold தொழில்நுட்பம் சார்ந்த பி2பி குளிர் சங்கிலி தீவுகளை வழங்குகிறது.

Jivika Healthcare

Jivika Healthcare சுகாதார சேவைகளில் இருக்கும் இடைவெளிகளை புத்தாக்க சிந்தனைகள் மூலம் நிரப்புகிறது.

Kazam

மின்சார வாகனங்கள் மற்றும் அதன் வெளியில் இருக்கும் பொருட்கள் கிளவுடில் இணைந்திருக்கவும் சிக்கலான அப்ளிகேஷன்களை இயக்கவும் உதவும் ஆப்பரேடிங் சிஸ்டம்தான் Kazam.

LightMetrics

ஏஐ தளம் மூலம் சாலைகளை பாதுகாப்பானவையாக மாற்றுகிறது Lightmetrics.

NeoDocs

Neodocs ஸ்மார்ட்போன் சார்ந்த இன்ஸ்டண்ட் லேப் டெஸ்ட் கிட்களை வழங்குகிறது.

Neuranics Lab

Neuranics Lab வெறும் இரண்டு சொட்டு ரத்தத்தைப் பயன்படுத்தி 10 நிமிட டயாக்னாஸ்டிக் தளத்தை உருவாக்குகிறது.

Nosh (Euphotic Labs)

டீப்-டெக் ஸ்டார்ட் அப்பான Nosh சுவையான சாப்பாட்டை சமைக்கக்கூடிய ஹோம் ரோபோக்களை உருவாக்குகிறது.

Onmeta

Onmeta வெப்3 வணிகங்களுக்கான விரைவான ஆன்/ஆஃப்-ரேம்ப் தீர்வாகும்

Saathi

Saathi இந்தியாவின் ஒரே மக்கும்தன்மை கொண்ட, உரமாகக்கூடிய சானிட்டரி பேட்களை வழங்குகிறது.

Savvology Games

ஒரிஜினல் கேம் தியரி சார்ந்த இரண்டு நிமிட கேம்களை Savvology Games உருவாக்குகிறது.

Sim Yog

Compliance Scope என்கிற கம்ப்யூடேஷனல் மென்பொருளை Simyog வழங்குகிறது.

Solinas

Solinas ரோபோடிக்ஸ் மற்றும் ஏஐ தீர்வுகளைப் பயன்படுத்தி மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறையை அகற்றி முழுமையான மேலாண்மை தீர்வளிக்கிறது.

TechXR

TechXR யார் வேண்டுமானாலும் ஊடாடும் வகையிலான XR உள்ளடக்கத்தை உருவாக்க உதவுகிறது. காப்புரிமை பெற்ற குறைந்த விலை சாதனத்தைப் பயன்படுத்தி ஏஆர்/விஆர் தொழில்நுட்பத்தை பரவலாக்குகிறது.

UrbanMatrix

ட்ரோன்களுக்கான ஆப்பரேடிங் சிஸ்டத்தை UrbanMatrix வழங்குகிறது.

VayuJal

VayuJal Technologies நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் காற்றிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது.

WYLD

Wyld இன்ஸ்டாகிராம் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக, இந்தியாவின் முதல் சோஷியல் கரன்சி கார்ட் வழங்குகிறது.

தமிழில்: ஸ்ரீவித்யா