‘சந்தைமதிப்பு மட்டுமே நிறுவன வளர்ச்சியின் சரியான அளவுகோல் அல்ல’ - Zerodha நிதின் காமத்!
யுவர் ஸ்டோரி ஆண்டுதோறும் பிரமாண்ட டெக் நிகழ்வான 'TechSparks' நிகழ்ச்சியை நடத்திவருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக இணையம் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சி, தற்போது நேரடியாக பெங்களூருவில் உள்ள தாஜ் யஸ்வந்த்பூரில் நடைபெறுகிறது. மூன்று நாள் நிகழ்வான இது, 10, 11, 12ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த பிரமாண்ட நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஷ்ரத்தா சர்மா விழாவை தொடங்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வின் முதல் சிறப்புப் பேச்சாளராக ஜெரோதா நிறுவனத்தின் நிறுவனர் நிதின் காமத் உடன் ஷ்ரத்தா சர்மா உரையாற்றினார்.
தற்போது ஸ்டார்ட் அப் உலகில் யூனிகார்ன் நிறுவனங்கள் பல உருவாகி வருகின்றன. நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலே இந்த நிலைமையை எட்டுகின்றன. ஆனால், எந்த நிதியும் திரட்டாமல் இந்த நிலைமையை எட்டி இருக்கிறது
. தற்போதைய ஸ்டார்ட் அப் சந்தை மதிப்பு குறித்து உங்களின் கருத்து என்ன எனும் கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார் நிதின் காமத்.”எங்கள் துறையில் எங்களை விட வருமானத்தில் குறைந்த நிறுவனங்கள் எங்களை விட அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக இருக்கின்றன. ஆனால், ஒரு நிறுவனத்துக்கு சந்தைமதிப்பு மட்டுமே சரியான அளவுகோல் கிடையாது. மதிப்பைவிட கூடுதல் தொகையில் நிதி திரட்டுவது என்பது மிகவும் ரிஸ்கானது. அது பெரிய அழுத்ததை கொடுக்கும். சந்தை மதிப்பு ஏற்ப பிஸினஸை உருவாக்க வேண்டியது முக்கியம். பாசிட்டிவ் கேஷ் புளோ இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்,” என்றார்.
கூடுதல் மதிப்புக்கு நிதியை பெற்றால் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நியாயத்தை செய்தாக வேண்டும். நீங்கள் முதலீட்டாளர்கள் ஆதரவாக செயலப்படத் தொடங்கினால் வாடிக்கையாளர்களுக்கு எதிர்மறையாக செயல்பட வேண்டி இருக்கும். அப்போது பிஸினஸ் குறையும். அதனால் வாடிக்கையாளார்களை கையகபடுத்துதற்கு மேலும் அதிக செலவாகும். அதனால் நிறுவனங்கள் சந்தை மதிப்பில் கவனம் செலுத்துவதைவிட சிறப்பாக பிஸினஸை உருவாக்கலாம் என்று கூறினார்,
நீங்கள் உடல் நடலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது சரி, அதேசமயம் பணியாளர்களின் உடல்நடலத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கீறீர்களே என்னும் கேள்விக்கு,
“பணியாளார்களின் உடல் நலன் மிகவும் முக்கியம். அடுத்த பத்தாண்டுகளுக்கு அவர்களுடன்தான் பணியாற்ற இருக்கிறோம். அதனால் அவர்கள் சிறந்த உடல் நடலத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்காக அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கிறோம்.”
கோவிட்டுக்கு பிறகு வீட்டில் இருந்து பணியாற்ற முடிவெடுத்தோம். அதன் பிறகு நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுகிறோம். தற்போது முக்கியமான சில பணியாளர்களை தவிர பெரும்பாலானவர்கள் பெங்களுக்கு வெளியேதான் இருக்கிறாரகள். மேலும், மாலை ஆறு மணிக்கு மேல் எந்தவிதமான சாட்களும் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு புது ஐடியா தோன்றினால், அது எந்த நேரமாக இருந்தாலும், நான் எங்கள் நிறுவன வாட்ஸ்-அப் குரூப்பில் போடுவேன், அதற்கு பதிலளித்து ஒவ்வொருவராக மெருகேற்றுவார்கள். இப்படியே எங்களுடைய உரையாடல் அதிகரித்தது. ஆனால் தற்போது ஆறு மணிக்கு மேல் எந்த பரிமாற்றங்களும் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம், என்றார்.
போட்டியாளர்கள் குறித்து கேள்விக்கு போட்டியாளார்கள் இருக்கத்தான் செய்வார்கள். போட்டியாளார்கள் இல்லை என்றால் சுவாரஸ்யம் இருக்காது. வரும் காலத்தில் எங்களை விட சிறந்த டெக்னாலஜி நிறுவனங்களுக்கு வாய்ப்பு இருக்கும். ஆனால், எங்களுடைய கொள்கையை மிஞ்சும் அளவுக்கு நிறுவனங்கள் இருக்குமா என்பது தெரியவில்லை.
நாங்கள் வாடிக்கையாளார்களுக்கு எந்த புஷ் நோட்டிபிகேஷனும் கொடுப்பதில்லை, வாடிக்கையாளர்களுக்கு எந்த பங்கு பரிந்துரையும் கொடுப்பதில்லை. இதுபோன்ற கொள்கைகளை பின்பற்றும் நிறுவனம் என்பது கடினம்தான். ஆரம்பத்தில் டிரேடர்களுக்கு உதவியாக இருந்தோம்.
அதனை தொடர்ந்து டிரேடர்கள் மற்றும் முதலீட்டாளார்களுக்கு உதவியாக இருந்தோம். தற்போது மக்கள் பணத்தை எப்படி சிறப்பாக கையாளுவதற்கு உதவியாக இருக்கிறோம். இந்தியர்கள் சேமிப்பில் கவனமாக இருக்கிறார்கள்.
ஆனால் தற்போது வளரும் தலைமுறையினர் ஒப்பீட்டளவில் குறைந்த கவனத்தில் இருக்கிறார்கள். பல பேஸ்கட்பால் வீரர்கள் ஜீரோவில் இருந்து பெரும் கோடீஸ்வரர்களாக மாறி மீண்டும் ஜீரோவுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள்.
அதிக பணம் அதிக வாய்ப்புகளை உருவாக்கும். அதன் பிறகு அந்த பணத்தை கையாளுவது சிரமாகிவிடும். பணம் என்பது சுதந்திரம். அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என நிதின் காம்த் பேசினார்,