[Tech 30] கடல்சார் கண்காணிப்புப் பணிகளை ட்ரோன் மூலம் மேற்கொள்ளும் EyeROV
கொச்சியைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் EyeROV, தொலைவில் இருந்து இயக்கப்படும் டிரோன்கள் செயல்பாடு மூலம், கடலில் உள்ள ஆலை நிலைகளை பார்வைவிட தரவுகள் சார்ந்த வசதியை அளிப்பதற்காக யுவர்ஸ்டோரியின் டெக் 30 பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடல்சார் ரோபோக்கள் கேளிகையானவை அல்ல. அவற்றை பற்றி நீங்கள் தினமும் கேள்விபடவும் முடியாது. ஆனால், இந்தத் துறையின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
மேம்பட்ட கடல்சார் தொழில்நுட்பங்கள், உலகின் பெரிய அளவிலான சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக் கூடியது என வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால், தன்வசம் உள்ள பெருங்கடல் பகுதியைக் கண்காணிப்பதற்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறதா?
கொச்சியைச் சேர்ந்த தொழில்முனைவோரான ஜான்ஸ் டி மத்தாய், கிரே ஆர்ஞ்ச் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது இந்த கேள்வியை தான் கேட்டுக் கொண்டார். அப்போது நிலத்தில் சோதனைகள் செய்வதைவிட, கடலில் செய்வது இன்னும் சவாலானது என தெரிந்து கொண்டார்.
“தண்ணீரின் வேகமான ஓட்டம், தெளிவற்ற பார்க்கும் தன்மை, கடல் விலங்குகள் உண்டாகும் மோசமான சூழல் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். வரம்புகளும் உண்டு. பகலில் மட்டும் தான் நீங்கள் தண்ணீரில் குதிக்க முடியும். ஓரளவுக்கு மேல் ஆழமாக செல்ல முடியாது. எனவே மனிதர்கள் கடல்சார் சோதனையில் ஈடுபடுவது ஆபத்தானது,” என்கிறார் மத்தாய்.
தொலைவில் இருந்து இயக்ப்படும் இயந்திரம் (ROV), கப்பல் போக்குவரத்து, இயற்கை எரிவாயு, கட்டுமான, கடல்சார் ஆய்வு ஆகிய துறைகளுக்கு இந்த பிரச்சனையை தீர்க்க வல்லது என்கிறார் அவர்.
EyeROV துவக்கம்
மத்தாய் தனது கல்லூரி நண்பர் கன்னாப்பா பழனியப்பனுடன் இணைந்து 2016ல் EyeROV எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கினார். கடலில் உள்ள ஆலை நிலைகளை கண்காணிப்பதற்கான தண்ணிருக்கு அடியில் செயல்படும் இந்தியாவின் முதல் வர்த்தக ட்ரோனை நிறுவனம் உருவாக்கியது.
மத்தாய்க்கு ரோபோடிக்ஸ் துறையில் அனுபவம் இருந்தது. கண்ணப்பா தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தில் பொறியாளராக இருந்திருக்கிறார். ஐஐடி சென்னையில் இருந்து கடல்சார் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.
“அவர் அடிக்கடி கடலுக்குச்சென்று கப்பல்கள் மற்றும் இதர கடல்சார் கட்டுமானங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பார்வையிடுவார் என்று தனது இணை நிறுவனர் பற்றி மத்தாய் கூறுகிறார்.
கண்காணிப்புக்கான இயந்திரத்தை உருவாக்குவதோடு, கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு தொடர்பான தரவுகள் ஆய்வு மற்றும் காட்சி நோக்கிலான விளக்கத்தை அளிக்கும் நுட்பத்தையும் நிறுவனம் உருவாக்கிக் கொண்டது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த நுட்பம் கடல்சார் நிலைகள் தொடர்பாக துரிதமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
“மனிதர்கள் தண்ணிருக்கு அடியில் கண்காணிப்பில் ஈடுபடும் போது, கண்காணிப்பில் தாமதம் அல்லது அனுபவமின்மை ஏற்படலாம். அவர்களால் 30 முதல் 40 மீட்டர் வரையே செய்ய முடியும். ஆனால் ட்ரோன்கள் 100 முதல் 200 மீட்டர் வரை ஆழமாக செல்லக்கூடியவை. கடலுக்கடியில் 300 மீட்டர் செல்லக்கூடிய ட்ரோன்களையும் உருவாக்கி வருகிறோம்,” என்கிறார் மத்தாய்.
அடக்கமான, எளிதாக இயக்கக் கூடிய, பாதுகாப்பான ட்ரோன் சாதனத்தை சொந்தமாக உருவாக்கி, கடல்சார் கண்காணிப்புக்கு தரவுகள் சார்ந்த அணுகுமுறையை கொண்டு வந்ததற்காக EyeROV ஸ்டார்ட் அப் நிறுவனம் யுவர்ஸ்டோரியின் டெக்30 பட்டியலில் இடம்பெறுகிறது.
இந்த சாதனம், செலவு குறைவானது, பல பயன்பாடுகள் கொண்டது மற்றும் முழுவதும் டிஜிட்டல் மயமானது என்பதால், கடலுக்கடியில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பில் பெரும் மாற்றத்தை கொண்டு வரக்கூடியது.
வர்த்தக நோக்கம்
EyeROV நிறுவனத்தின் முதல் வர்த்தக நோக்கிலான தண்ணிருக்கடியில் செயல்படும் ட்ரோன் EyeROV Tuna 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 50cm X 50cm X 50 cm கொண்டு கண சதுர வடிவிலான இந்த ட்ரோன், அணைக்கட்டுகள், துறைமுகங்கள், கப்பல் மையங்கள், எண்ணெய் எரிவாயு நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 1,000 மணி நேரத்திற்கு மேலான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. ஐந்து மாநிலங்களில் 25 திட்டங்களில் பங்களிப்பு செலுத்தியுள்ளது.
200 மீட்டர் ஆழத்தில் செயல்படக்கூடிய இந்த ட்ரோனை லேப்டாப் அல்லது ஜாய்ஸ்டிக் கொண்டு தொலைவில் இருந்து கட்டுப்படுத்தலாம். தண்ணிருக்கடியில் உள்ள காட்சிகளை படம் பிடிக்க காமிராவும் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த ஒளி சூழலிலும் இது செயல்படக்கூடியது. மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பம் கொண்டு இந்த வீடியோவை 30 சதவீதம் மேம்படுத்தலாம்.
EyeROV Tuna ட்ரோன் ரூ.18 லட்சம் விலை கொண்டது. அரசு மின் வணிக சந்தையில் விற்பனைக்கு உள்ளது. நிறுவனம் 2023ல் ரூ.5 கோடி வருவாயை பெற திட்டமிட்டுள்ளது.
“தண்ணிருக்கடியிலான கண்காணிப்புக்கு துணை சேவை வழங்க மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை அளிக்க கண்காணிப்பு நிறுவனங்கள் சிலவற்றுடன் கைகோர்க்க உள்ளோம்,” என்கிறார் மத்தாய்.
ட்ரோன் விற்பனைத்தவிர நிறுவனம், ரோபோ செயல்பாடுகளை ஒரு சேவையாக வழங்கும் RaaS மற்றும் மேடையை ஒரு சேவையாக வழங்குவது PaaS ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறது.
வாடிக்கையாளர்கள்
நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளராக பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) விளங்குகிறது. தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சி கண்டு வருகிறது.
EyeROV நிறுவனம், கொச்சி சர்வதேச கண்டெய்னர் முணையத்தில் முன்னோட்டத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பாரத் பெட்ரோலியம், இந்திய ரெயில்வே உள்ளிட்டவற்றுக்கும் முன்னோட்ட திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
மேக்கர் வில்லேஜ் கொச்சி, கேரளா ஸ்டார்ட் அப் திட்டம், இந்தியா இன்னேவேஷன் குரோத் திட்டம் ஆகியவற்றின் ஆதரவை நிறுவனம் பெற்றுள்ளது. 2019ல் நிறுவனம் கெயில் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.75 கோடி நிதி திரட்டியது.
புதிய சேவைகளை உருவாக்க ஒரு மில்லியன் டாலர் அளவிலான ஏ சுற்றுக்கு முந்தைய நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
“இந்தியா 1,000க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள், பாலங்களைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் பரிசோதனை செயல்முறை 50 ஆண்டு பழமையானது மற்றும் காகிதம் சர்ந்தது. இந்த பணிகளை துரிதமாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறோம்,” என்கிறார் மத்தாய்.