Techsparks Mumbai - 'சொந்த வீட்டிற்கு வரும் உணர்வை தருகிறது' - ஷ்ரத்தா சர்மா நெகிழ்ச்சி உரை!
யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மா, டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியின் முதல் மும்பை பதிப்பின் துவக்க நிகழ்ச்சியில் பேசும் போது,
“ 2008ல் யுவர்ஸ்டோரி மும்பையில் துவக்கப்பட்டது என்பதால், இது சொந்த வீட்டிற்கு வருவது போல இருக்கிறது...” என்று கூறினார்.

ஷ்ரத்தா சர்மாவின் துவக்க குறிப்புகள், முதல் முறையாக மும்பையில் நடைபெறும், யுவர்ஸ்டோரியின் முன்னணி ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப மாநாடான ’டெக்ஸ்பார்க்ஸ்’ நிகழ்ச்சிக்கான மனநிலையை உருவாக்கும் வகையில் அமைந்தது. முன்னோடிகள், புதுமையாக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் தொடர்புடையவர்களை ஒரே குடையின் கொண்டு வரும் வகையில் இந்த மாநாடு அமைகிறது.
விளையாட்டு நுட்பத்தை பெரிதாக பயன்படுத்திக்கொள்வது, இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி, சாஸ் நிறுவனங்களுக்கான வளர்ச்சி வழிகள், நாளைய இந்தியாவுக்கான மெகா போக்குகள் மற்றும் இதர விவாதங்கள் ஆகியவை தொடர்பாக நடைபெற உள்ள கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெக்ஸ்பார்க்ஸ் 2023 மும்பை பதிப்பில், Mumbai Pitch Fest விழாவும் நடைபெற்றது. இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் கண்டறியப்படாத மற்றும் பிரகாசமான ஸ்டார்ட் அப்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையிலான இந்த நிகழ்ச்சி நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் அமைகிறது.
இந்த மாநாடு மார்ச் 22 மற்றும் 23ம் தேதிகளில், கிராண்ட் ஹயாத் மும்பை ஹோட்டல் மற்றும் ரெஸிடன்சஸ் ஹோட்டலில் நடைபெற்றது. முன்னணி தொழில்நுட்பம், இந்திய சூழல், ஒட்டுமொத்த நோக்கிலான தலைமை, நன்மைக்கான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளை இந்த மாநாடு நோக்கமாக கொண்டிருந்தது.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan