Degpeg நிறுவனத்தில் Chennai Angels ரூ2.93 கோடி முதலீடு!
தி சென்னை ஏஞ்சல்ஸ், பெங்களூருவைச் சேர்ந்த நேரலை காமர்ஸ் நிறுவனமான Degpeg –ல், ரூ.2.93 கோடி முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஏஞ்சல் முதலீட்டு குழுமமான The Chennai Angels, பெங்களூருவைச் சேர்ந்த நேரலை காமர்ஸ் நிறுவனமான
–ல், வென்சர் கேடலிஸ்ட்ஸ் உடன் இணைந்து ரூ.2.93 கோடி முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.Degpeg நிறுவனம் இந்த நிதியை தனது சேவைகளை மேம்படுத்தவும், வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக்கொள்ள உள்ளது.
Degpeg நிறுவனம், பிராண்ட்கள், சில்லறை மற்றும் வர்த்தக நிறுவனங்கள், செல்வாக்காளர்கள் தங்கள் இணையதளம் வாயிலாக அல்லது 30க்கும் மேற்பட்ட சமூக சேனல்கள் வாயிலாக நேரலையாக செயல்பட வழி செய்கிறது.
உலக அளவிலான ஃபுல் ஸ்டேக் நேரலை காமர்ஸ் மேடையாக வளரும் இலக்கு கொண்ட Degpeg நேரலை காமர்ஸ் மற்றும் பிராண்ட் ஒருங்கிணைப்பிற்கான சேவைகளை வழங்குகிறது. 360 கோணத்திலான அணுகுமுறையை நிறுவனம் கொண்டுள்ளது. உள்ளடக்கம், செயல்பாடு மார்க்கெட்டிங், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது.
“கேம்கள், கல்வி, உள்ளடக்க உருவாக்குனர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளில் லைவ் ஸ்டிரீமிங் வளர்ந்து வருகிறது. அனைத்து வகையான நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களுக்கு வீடியோ, நேரலை காமர்ஸ் சேவைகளை வழங்கி வருகிறோம். இந்த இலக்கை நோக்கி முன்னேற தி சென்னைம் ஏஞ்சல்ஸ் நிதி உதவும்,” என்று Degpeg நிறுவனர் விபுல் ஜெயின் கூறியுள்ளார்.
Social Commerce பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் தனித்தன்மையான வாய்ப்பை Degpeg பெற்றுள்ளது. நிறுவன குழு மிகுந்த தொலைநோக்கு, திட்டமிடல் திறன், செயலாக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளது, என தி சென்னை ஏஞ்சல்ஸ் முதன்மை முதலீட்டாளர் கவின்கேர் இயக்குனர், சி.இ.ஓ வி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.