சென்னை நிறுவனம் ‘Indus Valley'ல் சென்னை ஏஞ்சல்ஸ் ரூ.2.5 கோடி முதலீடு!

இல்லம் மற்றும் சமையலறைப் பொருட்கள் பிரிவில் தனது இருப்பை வளர்த்துக்கொள்ள இந்த நிதியை நிறுவனம் பயன்படுத்துக்கொள்ளும்.

17th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தி சென்னை ஏஞ்சல்ஸ் (டிசிஏ) நிறுவனம், 'குட் ரூட்ஸ் கிச்சன்வேர் பிரைவெட் லிட்' நிறுவனத்தின் சமையலறைப் பொருட்கள் தயாரிப்புப் பிராண்டான ‘தி இண்டஸ் வேலி’யில், பிரிட்ஜ் சுற்றாக, ரூ.2.5 கோடி கூடுதலாக முதலீடு செய்துள்ளது. இல்லம் மற்றும் சமையலறைப் பொருட்கள் பிரிவில் தனது இருப்பை வளர்த்துக்கொள்ள இந்த நிதியை நிறுவனம் பயன்படுத்துக்கொள்ளும்.  

 

சென்னையின் முன்னணி தொழிலதிபர்கள் சி.கே.ரங்கநாதன், வி.சங்கர், சதீஷ் குமார், லட்சுமி நாராயணன் பங்கேற்ற இந்த சுற்று தி சென்னை ஏஞ்சல்சின் சந்து நாயர் தலைமையில் அமைந்திருந்தது.

indusvalley
 “இண்டஸ் வேலி வளர்ச்சி உற்சாகம் அளிக்கிறது. இந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பு கொண்டுள்ளதாக நம்புகிறோம். இந்த பிராண்ட், அதன் வர்த்தக மாதிரி மீது கொண்டுள்ள நம்பிக்கையை இந்த பிரிட்ஜ் சுற்று நிதி உறுதி செய்கிறது,” என்று சென்னை ஏஞ்சல்ஸ் சந்து நாயர் தெரிவித்தார்.

“சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனத்திடன் இருந்து வந்துள்ள இந்த இரண்டாவது சுற்று நிதியை, நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கிறோம். கடந்த நிதியாண்டில் 500 சதவீதம் வளர்ச்சி அடைந்தோம். அடுத்த ஆண்டும் வேகமான வளர்ச்சி தொடரும்” என்று தி இண்டஸ் வேலி ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.

 “எங்கள் நோக்கம் சமையலறையை பாதுகாப்பானதாக உருவாக்குவதாகும். இந்தியாவில் பலரும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை நோக்கி நகரும் நிலையில், இலக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது,” என்று தி இண்டஸ் வேலியின் மதுமிதா உதய்குமார் தெரிவித்தார்.

இண்டஸ் வேலி, தவா, கடாய் போன்ற சமையலறைப் பொருட்களை விற்பனை செய்கிறது. இதன் இணையதளம் www.theindusvalley.in மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்கிறது. சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனம், தீவிரமாக இயங்கி வரும், தேவதை முதலீட்டு நிறுவனமாக விளங்குகிறது.


தமிழில் : சைபர்சிம்மன்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close