18 வயதில் 5000 ரூபாய் உடன் நிறுவனம் துவங்கி 3ஆண்டில் 1 கோடி வருவாய் ஈட்டும் வாலிபர்!

8th Jan 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இரண்டாம் கட்ட நகரங்களில் இருந்து சர்வதேச அளவில் நிறுவனங்கள் உயர்வது மிகக் குறைவு அப்படி போப்பாலைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ’ஹேக்கர்கெர்னல்’ என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் மிகக் குறைந்த கால அளவில் சர்வதேச நிலையை எட்டியுள்ளது.

2015ல் இந்நிறுவனத்தின் நிறுவனர் ஹுசேன் சைஃபி தனது அப்பாவின் கடையில் பில்லிங் வேலையை பார்த்துக்கொண்டே கோடிங் செய்ய கற்று வந்தார். அதன்பின் 3 வருடத்திற்குள் தனது பிசிஏ படிப்பை முடித்ததோடு தனது 21 வயதிலே ஹேக்கர்கெர்னல் என ஒரு ஸ்டார்ட்அப்-ஐ துவங்கி அதை வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார்.

2015ல் 5000 ரூபாய் மதிப்பில் துவங்கிய இவரது நிறுவனம் இப்பொழுது வருடம் 1 கோடி வருவாய் ஈட்டுகிறது.

முன்றே வருடத்திற்குள் 25 பொறியாளர்களை நியமித்து 200க்கும் அதிகமான நிறுவனங்களுடன் பணிபுரிந்து அதீத வளர்ச்சியை கண்டுள்ளது இவரது நிறுவனம். இவர்கள் வாடிக்கையாளர்களில் சிலர் Eduzina, Zingfy மற்றும் Madcue.

நிறுவனர்கள் ஹுசேன் சைஃபி, ரித்திக் சோனி மற்றும் யாஷ் டபி

கற்பதில் ஆர்வம் கொண்ட ஹுசேன், தனது 12வது வயதிலே c++ மற்றும் HTML-ஐ தானே ஆர்வத்துடன் சுயமாக கற்றுக்கொண்டுள்ளார். மென்பொருளுக்கு பரிட்சியம் ஆன இவர், 2015ல் தனது இணயதள பில்லை தனது சொந்த காசில் கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் வலைதள வடிவமைப்பாளராக ஃபிரிலான்ஸிங் சேவையை செய்யத் துவங்கினார். அப்போழுது ஒரு உள்ளூர் பிராண்டின் இ-காமர்ஸ் தளத்தை உருவாக்க ஒரு வாய்ப்புக் கிடைக்க அதை பிடித்துக்கொண்டு இன்று ஒரு வெற்றிகரமான நிறுவனராய் வளர்ந்துள்ளார்.

“எனது முதல் வாடிக்கையாளர் உள்ளூர் பாஸ்ட் ஃபுட் உணவகம் ஒன்று, நல்ல உணவை அளிக்கும் இவ்வுணவக நிறுவனருக்கும் இணயத்தளம் பற்றிய விழிப்புணர்வு இல்லை அதனால் அவரின் உணவகத்தை வலைத்தளத்தில் அறிமுகம் படுத்த உதவினேன்,” என்கிறார் ஹுசேன்.

தனது முதல் வருவாய் 5000 ரூபாவை தனது முதலீடாய் வைத்து ’ஹேக்கர்கெர்னல்’ ஸ்டார்ட்-அப் துவங்கியுள்ளார் இவர். அதற்கும் முன் தன் தந்தை கடையில் பணியாற்றி வந்த ஹுசேன் வேலையின் போதே ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ஆன்டிராய்ட் தொழில்நுட்பங்களை கற்று வந்தார். அதோடு நிரலாக்க செய்முறை மற்றும் திறன் பற்றி வலைபதிவு மற்றும் யூடியூப் வீடியோக்களும் இயக்கி வந்தார். அதன்பின் 2015 இறுதியில் தனது ஸ்டார்ட்-அப்பை துவங்கினார்.

“அந்த யூடியூப் வீடியோக்கள் எனக்கு மிகவும் உதவியது, அதன் மூலம் மென்பொருள் பிராஜெக்ட்டுகள் வந்தனர். அப்படி வரும் பிராஜக்டுகளை முடித்து கொடுத்து மாதம் 15000 முதல் 20000 ரூபாய் வரை சம்பாதித்து வந்தேன்,” என்கிறார்.

படிப்படியாக பிராஜகட்டுகள் அதிகரிக்க தனது நண்பர் ரித்திக் சோனியை உதவ அழைத்துள்ளார் ஹுசேன். இருவரும் சேர்ந்து பல பிராஜக்கட்டுகளை முடிக்க போப்பாலை சேர்ந்த பல ஸ்டார்ட்அப் களுடன் இணைந்து பணிப்புரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். வலைதளத்தோடு நின்று விடாமல் அதனைத் தொடர்ந்து மொபைல் பயன்பாடுகளை உருவாக்கவும் துவங்கினர். 2016ல் மூன்றாவது துணை நிறுவனர் யாஷ் டபி இந்நிருவனத்தில் இணைந்தார்.

உள்ளூரில் நல்ல வளர்ச்சியை கண்ட ஹேக்கர்கெர்னல் சர்வதேச அளவை எட்டியது?

உள்ளூரில் இவர்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய இந்தியாவை தாண்டி அமெரிக்கா, ஜப்பான், மற்றும் துபாய் என சர்வதேச அளவில் கால்பதித்து விட்டது.

இரண்டு வருடத்திற்கு முன்பு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் அறிவித்ததில் இருந்து 2000க்கும் மேலான ஸ்டார்ட் அப்-கள் தொன்றியியுள்ளது. அதில் இரண்டாம் கட்ட ஊரில் இருந்து நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது இந்நிறுவனம்.

சாதாரண வலைத்தளத்தை உருவாக்க 5,000 முதல் 20,000 ஆயிரம் ரூபாய் வரை இந்நிறுவனம் வசூலிக்கிறது. பயனாளர்களின் வடிவம், வடிவம் மற்றும் தொழில்நுட்பம் சேர்க்கையை வைத்து விலையை நிர்ணயிக்கின்றனர்.

தற்போது 1 கோடி வரை வருவாய் ஈட்டும் இந்நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தாலும் வலை மற்றும் செயிலியின் தேவைகளாலும் வரும் ஆண்டுகளில் இன்னும் நல்ல வளர்ச்சியை காணும்.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India